search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.
    • 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலையை அடுத்துள்ள மேனேந்தல் மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொதுவாழ்வு மற்றும் அரசியல் பயணம் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை காண வரும் மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்டுள்ளது.

    மிசா காலத்தில் மு.க. ஸ்டாலின் சிறையில் பட்ட துன்பங்களை காணும் வகையில் சிறைச்சா லைக்குள் அவரை போலீ சார் தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.

    மாணவ- மாணவிகள் மற்றும் குழந்தைகள் கண்காட்சியை பார்வையிட்ட பிறகு பொழுது போக்கு வதற்காக மைதானத்தில் ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு ஸ்டால்கள், குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், இந்த புகைப்பட கண்காட்சி வருங்கால இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது வாரிசு அரசியலுக்கு இடமில்லை. உழைப்பால் உயர்ந்தவர் முதல்வர் என்பது தெரிகிறது என்றார்.

    அமைச்சர் மூர்த்தி கூறுகையில், 10 நாட்கள் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பார்வையிட உள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் நடிகர் வடிவேல் பார்வையிட உள்ளார். 25-ந் தேதி மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை காண வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி மதுரை வடக்கு, மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடை பெறுகிறது என்றார்.

    திறப்பு விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன், எம்.எல்.ஏ. க்கள் சோழவந்தான் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், உயர்மட்ட செயல் திட்ட குழு உறுப்பி னர் குழந்தைவேல்,மாநில தீர்மானக் குழு உறுப்பினர் அக்ரி.கணேசன்.

    பொதுக்குழு உறுப்பினர் உசிலை சரவண குமார், மகிழன், அவைத் தலைவர்கள் பாலசுப்ர மணியன், ஒச்சுபாலு, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி, வக்கீல் கலாநிதி, இளைஞரணி மாநில இணைச்செயலாளர் ஜி.பி. ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி.

    பகுதி செயலாளர்கள் சசிகுமார், ஈசுவரன், கிருஷ்ணபாண்டி, ஒன்றிய சேர்மன் வீரராகவன், வேட்டையன், இளைஞரணி மூவேந்திரன், வைகை மருது, மதி வெங்கட், அரசு வக்கீல் ஸ்ரீதர், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ரேணுகா ஈசுவரி, மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் வக்கீல் குட்டி என்ற ராஜரத்தினம், கருப்புசாமி, ரோகிணி பொம்மதேவன் மற்றும் அமெரிக்கன் கல்லூரி, யாதவா் கல்லூரி, லேடி டோக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

    Next Story
    ×