search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    • இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது.
    • அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே வீரணம்பாளையத்தில் உள்ள ஒரு தம்பதியினரின் ஒரு வயது குழந்தை சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் வயரை பிடித்துள்ளது. அப்போது மின் வயரில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்த பெற்றோர் மின்சாரம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கடந்த ஒரு வாரமாக சுயநி னைவு சுயநினைவு இல்லாமல் இருந்த அக்குழந்தை இறந்து விட்டது. இது குறித்த செய்தி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தைகள் உள்ள வீட்டில் மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது குழந்தை களுக்கு எட்டாத வகையில் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம் என மின்சார துறையினர் கேட்டு கொண்டு உள்ளனர்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியது.
    • இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கடையின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவிய தால் முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் கும்பகோணம், திருவிடை மருதூர் தீயணைப்பு துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்க ப்பட்டது.

    மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.
    • 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், சின்னதுரை. இவர்களிடம் ஆளக்கொரு பசுமாடு உள்ளது. இதேபோல தெம்மூர் கிராமத்தை சேர்ந்த சரவணனிடம் காளை மாடு உள்ளது. இந்த 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. நீண்ட நேரமாகியும் மாடுகள் திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தேடினார்கள். அப்போது வயல்வெளி பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்்ளனர்.

    • பரமசிவம் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார்.
    • மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியை சரிசெய்ய வழியுறுத்தி பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார். என கூறி பரமசிவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மின்சார வாரியத்தை கண்டித்து விருத்தாசலம் - சேலம் சாலையில்  கண்டபங்குறிச்சி எடைபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்த னர். இதனையடுத்து போலீ சார் இறந்த பரமசி வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார்.
    • கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் - தேன்மொழி தம்பதியினரின் மகன் கோகுல் (வயது 14).

    இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலிவுற்ற நிலையில் இருந்த கோகுலின் தந்தை பன்னீர்செல்வம் கடந்த 6-ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். பன்னீர்செல்வம் உயிரிழந்து சில நாட்கள் ஆன நிலையில் நேற்று இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கோகுல் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அவருடைய தாத்தா இளங்கோ (75) மின்சாரம் இல்லாத நேரத்தில் பழுதான மின்விளக்கு ஒன்றை சரிசெய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் வந்ததை அடுத்து இளங்கோவின் கைகளில் மின்சாரம் தாக்கவே அச்சத்தில் மின்கம்பியை தூக்கி வீசியதாகவும், மின்வயர் கோகுல் மீது விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் கோகுல் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு கோகுல் சிகிச்சை பலனின்றி அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோகுலின் தாத்தா இளங்கோ வீட்டிலேயே பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை உயிரிழந்து 2 நாட்களே ஆன நிலையில் அவருடைய 14 வயதே ஆன சிறுவன் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவமும், சோகத்தில் தாத்தா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் காமேஷ்வரம் சுற்றுவட்டார கிராம மக்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது 26).இவர், இரவி புதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி பறவை இறந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சப்ளை பாதிக்கப்பட் டது. அதை சரி செய்ய நேற்றிரவு ஏசுராஜன் சென்றார்.

    டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஏசுராஜன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகா யம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏசுராஜ னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏசுராஜன் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அவரது தாய் கனகம் மற்றும் அவரது உறவினர்கள் ஏசுராஜன் உடல் வைக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். தனது மகன் சாவு குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.

    மின்வாரியத்தின் அலட்சி யத்தால் தனது மகன் பரிதாபமாக இறந்து விட்டான் என்று அவர் புகார் கூறினார். அவரது புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது மகன் பணியில் சேர்ந்து 6 மாதமே ஆகிறது. முன் அனுபவம் இல்லாத அவனை மின்மாற்றியில் ஏற எப்படி அனுமதித்தார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான். ஆகவே எனது மகனின் மரணத்திற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும்

    திருப்பூர்:

    திருப்பூா் வட்டார முழுக்கூலி பாத்திர பட்டைறைதாரா்கள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் 15 வேலம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் துரைசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    பாத்திரத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறித் தொழிலைப்போல பாத்திரத் தொழிலுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

    பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாத்திரத் தொழிலை சிறு,குறு தொழிலாக கருதி சலுகைகள் வழங்க வேண்டும். பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பாலப்பம்பட்டி, தேவனூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
    • நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    உடுமலை

    உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டி, தேவனூா்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

    பாலப்பம்பட்டி துணை மின் நிலையம்: உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ெரயில் நிலையம், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள்புதூா், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

    தேவனூா்புதூா் துணை மின் நிலையம்: தேவனூா்புதூா், செல்லப்பம்பாளையம், கரட்டூா், ராவணாபுரம், ஆண்டியூா், சின்னபொம்மன்சாளை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்த்தநாரிபாளையம், புங்கமுத்தூா்.

    • சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர்:

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேவூர் மற்றும் வடுகபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை சேவூர், அசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர் பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்கட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன்காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம், வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டப்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
    • வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    சங்கராபுரம் அடுத்த தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வின்சென்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

    உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×