search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலியான மின் ஊழியரின் தாய் போலீசில் பரபரப்பு புகார்
    X

    மின்சாரம் தாக்கி பலியான மின் ஊழியரின் தாய் போலீசில் பரபரப்பு புகார்

    • அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மகன் ஏசுராஜன் (வயது 26).இவர், இரவி புதூர்கடை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கோடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரின் மேலே செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி பறவை இறந்தது. இதனால் அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சப்ளை பாதிக்கப்பட் டது. அதை சரி செய்ய நேற்றிரவு ஏசுராஜன் சென்றார்.

    டிரான்ஸ்பார்மர் மீது ஏறி சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஏசுராஜன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகா யம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏசுராஜ னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏசுராஜன் இறந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து அவரது தாய் கனகம் மற்றும் அவரது உறவினர்கள் ஏசுராஜன் உடல் வைக்கப் பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். தனது மகன் சாவு குறித்து அவர் தக்கலை போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார்.

    மின்வாரியத்தின் அலட்சி யத்தால் தனது மகன் பரிதாபமாக இறந்து விட்டான் என்று அவர் புகார் கூறினார். அவரது புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனது மகன் பணியில் சேர்ந்து 6 மாதமே ஆகிறது. முன் அனுபவம் இல்லாத அவனை மின்மாற்றியில் ஏற எப்படி அனுமதித்தார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. மின்வாரியத்தின் அலட்சியத்தாலோ எனது மகன் இறந்துள்ளான். ஆகவே எனது மகனின் மரணத்திற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×