என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பாத்திர தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் - பட்டறைதாரர்கள் வலியுறுத்தல்
- பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும்
திருப்பூர்:
திருப்பூா் வட்டார முழுக்கூலி பாத்திர பட்டைறைதாரா்கள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் 15 வேலம்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் துரைசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-
பாத்திரத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருள்களை மானிய விலையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறித் தொழிலைப்போல பாத்திரத் தொழிலுக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
பாத்திரத் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாத்திரத் தொழிலை சிறு,குறு தொழிலாக கருதி சலுகைகள் வழங்க வேண்டும். பாத்திரத் தொழிலை நவீனமயமாக்க மத்திய, மாநில அரசுகள் கடனுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story






