சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com