search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள்"

    • பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
    • 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் சிரமம் அடைகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரத்தை ஓட்டி அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ, அரசு பள்ளிகள் உள்ளது .

    இந்த பள்ளி, கல்லூரி களில் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மீண்டும் நகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் தருமபுரியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலையில் 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் கல்லூரி நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து முண்டியடித்து ஓடி பேருந்தில் ஏறுகின்றனர். அதேபோல் கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பும் போதும் பேருந்துகளை பிடிக்க மணி கணக்கில் காத்திருந்து பேருந்து பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-

    அரசு மகளிருக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மகளிர் கல்லூரிக்கு 5 பேருந்துகளை இயக்கினால் பெரும் பணம் இழப்பீடு ஏற்படுகிறது . இதனால் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை குறைவாக இயக்கி வருகிறது . அதேபோல் நகர பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில்பயிற்சி கல்லூரி, செட்டி கரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி, உள்ளிட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

    இதனால் பொது மக்கள் செல்லும் பேருந்து களிலேயே ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கி பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • காலை உணவு திட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
    • திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    எனது கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என பெருமிதம் கொண்டார்.

    இந்த காலை உணவு திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    அதன்படி அவர் நாளை நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு பள்ளியில் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதேப்போல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.

    இந்த பணிகளை தி.மு.க மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருக்குவளை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
    • டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.

    • முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் " நமது தொழிற்ப யிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்" என்ற விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதில் தொழிற்பயிற்சி பள்ளியில் மாணவிகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் முன்னணி நிறுவ னங்களில் பணிபுரியும் பயிற்சியா ளர்களை கொண்டு பயிற்சி அளிக்க ப்படுகிறது.

    நவீன தொழில் நுட்பத்தில் ஆய்வகங்கள், பணிமனைகள் மற்றும் கண்காட்சி அமைக்க ப்பட்டுள்ளது.

    இதனை மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளிக்கலாம்.

    மேலும் 4.0 தர தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு ப்போட்டி, கவிதைபோட்டி, ஓவியப்போட்டி போன்றவை நடைபெறுகிறது.

    புதிதாக சேர்ந்துள்ள மாணவிகளின் சகோதரிகள் மற்றும் பெண் உறவினர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் நகர்மன்ற தலைவி வழங்கினார்
    • சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் திலகவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    இந்தநிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகரசெயலாளர் ஸ்ரீதர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜஸ்டின் திரவியம், சின்னச்சாமி, வீரக்குமார், ஜமீலாபெளசியா ஆகி யோர் கலந்து கொண்டனர். தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதேபோல் திருமங்கலம் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    • சமூக வலைதளங்களை கல்லூரி மாணவிகள் தவிர்ப்பது நல்லது.
    • சகோதரத்துவத்துடன் மாணவிகள் பழக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி நிா்வாகம், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் பகடி வதை தடுப்புச் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமை தாங்கி பேசியதாவது :-

    பெண்களை கேலி செய்வதைத் தடுப்பதற்காக பகடிவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. கல்வி நிலையங்களில் பெண்கள் கேலிவதைக்கு ஆளா கும்போது மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படு கின்றனா். எனவே சகோத ரத்துவத்துடன் மாணவிகள் பழக வேண்டும்.

    ரேகிங் செய்யும் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களுக்கு தூண்டு கோலாக இருப்பவர்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

    கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் , சமூக வலைதளங்களை தவிர்ப்பது நல்லது. கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைகளையும் கல்லூரி பேராசிரியர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ தயங்காமல் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் டெரன்ஸியா மேரி, கல்லூரி முதல்வா் காயத்ரி, கல்லூரி செயலாளர் மாரியம்மாள்,

    பேராசிரியர்கள் முத்தழகி, தீபா, வழக்குரைஞா் சாந்தா, வல்லம் அனைத்து மகளிா் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, நாட்டு நலப்ப ணித்திட்ட ஒருங்கி ணைப்பாளா் முத்தழகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பேராசிரியா் தீபா நன்றி கூறினாா். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.
    • தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான நடனம் மற்றும் பல்வேறு போட்டிகள் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி உள்ள ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து 12 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவிகள் மேலோங்கி வர மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ஊக்குவிப்பு தொடர்பான பாடல்கள் முதல் பின்னல் கோலாட்டம் என வித்தியாசமான மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வை யாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

    தொடர்ந்து 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகளுக்கு இடையில் நடைபெற்ற சிகை அலங்கார போட்டியில் வித்தியாசமான முறையில் பின்னல் ஜடைகளுடன் போஸ் கொடுத்து மாணவிகள் மேடையை அலங்கரித்தனர்.

    இதைப்போல சுற்றுச்சூழல் மாசுபடுதல், இயற்கை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை தங்களின் முகங்களில் வரைந்து முக ஓவிய போட்டியில் வண்ணமயமான முகங்களுடன் மாணவிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து நடைபெற்ற மெஹந்தி போட்டியில் கை முழுவதும் மருதாணிகள் போட்டு தங்களுடைய திறமைகளை நர்சிங் கல்லூரி மாணவிகள் வெளிப்படுத்தினர்.

    மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்படுகின்ற மாணவிகள் அடுத்த மாதம் மாநில அளவில் சேலத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    • ஊரக நலப்பணிகள் தொழுநோய் அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
    • கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .

    இதில் செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    முன்னதாக கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு குடும்ப நலம் சார்ந்த கையேடுகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் அவர் துணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் தொழுநோய் அலுவலகம் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் கலைவாணி, குடும்ப நலம் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துணை இயக்குனர் மலர்விழி, வட்டார விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர்.
    • பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காந்திகிராமம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

    காந்திகிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் பள்ளி அமைந்துள்ளது. வனத்துறையினர் தடை காரணமாக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் காந்திகிராம பொதுமக்கள் இன்றளவும் கரடு முரடான மலைப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கரடு முரடான பாதை என்பதால் மோட்டார் சைக்கிள்களையும் இயக்க முடியாது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் 2 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்த பகுதியில் கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் உள்ளது. எனவே பள்ளிக்கு நடந்து செல்லும் குழந்தைகளுக்கு வனவிலங்குகளால் ஆபத்து ஏற்பட கூடும் என்பதால் பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளி வரை நடந்து சென்று வருகின்றனர். இதே போல பள்ளிக்கு குடிநீர், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதாலும் மாலையில் பள்ளி முடிந்து வரும்போது இருட்டி விடுவதாலும் குழந்தைகள் அச்சத்துடனே வரும் நிலை உள்ளது.

    பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தை மர்மநபர்கள் சிலர் சமூக விரோத செயல்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மலைக்கிராம குழந்தைகளின் நலனுக்காக தும்மக்குண்டுவில் இருந்து காந்திகிராமம் வரை முழுமையாக தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடுதியில் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்துள்ளனர்.
    • 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

    குண்டடம்:

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை திருப்பூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான இலவச விடுதியானது குண்டடம் ஒன்றியத்தில் உள்ள சேடபாளையத்திலும், மூலனூர் ஒன்றியத்தில் உள்ள மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தரமான சரிவிகித உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சோலார் வாட்டர் ஹீட்டர், தனித்தனி படுக்கை வசதியுடன் கூடிய அறைகள், மாதந்தோறும் மாணவிகளுக்கு தேவையான அழகு சாதன பொருட்கள் வழங்குதல், நூலக வசதி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    மாணவிகளின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் விடுதி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. விடுதியில் சேர்ந்து பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 200 ரூபாய் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவிகள் சேர்க்கை ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விடுதி வசதி தேவைப்படும் மாணவிகள் இந்த விடுதிகளில் சேர்ந்து பயன் பெறுமாறு குண்டடம் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் அமுதா மற்றும் மூலனூர் ஒன்றிய பொறுப்பு மேற்பார்வையாளர் வசுமதி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.

    மேற்கண்ட விடுதிகளில் சேர விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம். குண்டடம் ஒன்றியம்: 9788858646, மூலனூர் ஒன்றியம்: 9788858648.

    • தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினைப் பெருமைப் படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாகக்" கொண்டாடப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 12-ந்தேதி முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    ''தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும் நடைபெற வுள்ளது.

    மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவி லான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.

    மாநில அளவிலான போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20ஆயிரம் வீதம் வழங்கப் பெறும்.எனவே பள்ளி மாணவ- மாணவிகள் இப்போட்டி களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தா
    • மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.6-

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 9- ம் ஆண்டு சங்கமம் ,முதலாமாண்டு மாணவிகள் வரவேற்பு நிகழ்ச்சிஏ.வி.பி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.ஏ.வி.பி கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி கல்லூரி முதல்வர் டாக்டர் லீலாவதி வரவேற்று பேசினார்.

    கல்லூரி செயலாளர் லதா கார்த்திகேயன் பாராட்டுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மோட்டி வேசன் அகாடமி சி.இ.ஓ., முனைவர். ஜெகன் கலந்து கொண்டு மாணவர்கள் முயற்சியுடன் வெற்றி பெறுவதற்குரிய எளிய கருத்துகளையும், மாணவிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சாதனை படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் ,மகிழ்ச்சி யுடன் வாழ வேண்டும்.

    மாணவிகள் கல்லூரி காலத்தில் தங்களின் எல்லா தனித்திறமைகளையும் வெளிகாட்ட வேண்டும் என்றார். முடிவில் ஏ.வி.பி கல்லூரி ஆங்கிலத்துறை தலைவி மகாலட்சுமி நன்றி கூறினார். 

    ×