search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுரை போட்டிகள்"

    • தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு-கட்டுரை போட்டிகள் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினைப் பெருமைப் படுத்தும் வகையில் அந்த நாள் "தமிழ்நாடு நாளாகக்" கொண்டாடப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 12-ந்தேதி முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன. அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.

    ''தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்" என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "தமிழ்த் திரை உலகத்தைப் புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல்" என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி யும் நடைபெற வுள்ளது.

    மாவட்ட அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.7ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவி லான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.

    மாநில அளவிலான போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.30ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20ஆயிரம் வீதம் வழங்கப் பெறும்.எனவே பள்ளி மாணவ- மாணவிகள் இப்போட்டி களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    ×