search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி படித்த பள்ளியில் உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர்
    X

    திருக்குவளையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு வாயில். (அடுத்தபடம்): திருக்குவளையில் புதுபொழிவு ெபறும் பள்ளி.

    கருணாநிதி படித்த பள்ளியில் உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்-அமைச்சர்

    • காலை உணவு திட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
    • திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    எனது கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என பெருமிதம் கொண்டார்.

    இந்த காலை உணவு திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    அதன்படி அவர் நாளை நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

    நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு பள்ளியில் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இதேப்போல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.

    இந்த பணிகளை தி.மு.க மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருக்குவளை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×