search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    • வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
    • மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

    ராணுவ கண்காணிப்பு மூலம் அம்மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராக துவங்கியது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த வரிசையில், இன்றும் மணிப்பூரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இன்றைய தாக்குதலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயமுற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கி சூட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ராய்பூரில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கலந்துகொண்டார்.
    • பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாக அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராய்பூரில் உள்ள ராமர் கோவிலில் தூய்மை இயக்கத்தில் இன்று பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 55 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு இந்தியா புறக்கணிக்கப்பட்டதாகவும், வடகிழக்கு இந்தியாவை பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரிக்கும் சதிகள் நடைபெற்றதாகவும் கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் தான், மணிப்பூர் உட்பட வடகிழக்கு இந்தியா வளர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,

    ராய்பூரில் தூய்மை இயக்கத்தில் பங்கேற்ற பின்னர், மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள பிவிடிஜி கிராமத்திற்கு செல்ல இருக்கிறார். அங்கு மாவட்ட பஞ்சாயத்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பிரதான் மந்திரி ஜன்மம்' நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நயா ராய்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரது தலைமையில் நடைபெறும் ஜல் ஜீவன் மிஷன் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் பின்னர் மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    • ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது.

    மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    இந்நிலையில், யாத்திரை பயணத்தில் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.

    மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
    • அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுப்பு.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் கடந்த ஆண்டு ஜனவரி 30ம் தேதி வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டார். தெற்கில் இருந்து வடக்கு நோக்கி அவர் பாத யாத்திரை சென்றார்.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 12 மாநிலங் கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 136 நாட்கள் அவரது நடைபயணம் இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நாட்டின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி ராகுல்காந்தி 2-வது கட்ட மாக நடைபயணம் மேற் கொள்ள முடிவு செய்தார்.

    'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது. 

    அங்குள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நடை பயணத்தை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால் அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதை தொடர்ந்து மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கியது.

    ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    நடைபயணத்தையொட்டி மணிப்பூர் பா.ஜனதா அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. தொடக்க விழா 1 மணி நேரத்துக்கு மேல் நடைபெறக் கூடாது, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 3 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பேரணியின்போது நாட்டுக்கு எதிரான, மத ரீதியான கோஷங்களை எழுப்பக் கூடாது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசு அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில் அமைதி சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் விதமாக நடைபயணத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தவுபல் துணை கமிஷனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    மேலும் அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வு எடுப்பதற்கும் அம்மாநில பா.ஜனதா அரசு அனுமதி மறுத்துள்ளது.

    ராகுல்காந்தியின் முந்தைய நடைபயணத்தை போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலும் பஸ்களில் நீதிப்பயணம் மேற்கொள்ளப் பட உள்ளது. சில வேளைகளில் நடைபயணம் இருக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    மொத்தம் 6713 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 110 மாவட் டங்கள், 100 எம்.பி. தொகுதிகள் வழியாக 67 நாட்கள் நடைபெற உள்ளது. மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ் தான், குஜராத் மராட்டியம் ஆகிய 15 மாநிங்களில் நடைபயணம் மேற் கொள்ளப்படும். மார்ச் 20 அல்லது 21-ந் தேதி மும்பையில் பயணம் நிறைவடைய உள்ளது.

    பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்ப மத்திய அரசு வாய்ப்பு அளிக்காததாலும், அரசமைப்பு சட்டம் பாதுகாத்து வரும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வற்றை நிலைநாட்டவும், கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜனதா ஆட்சியின் அநீதிக்கு எதிராக குரல் எழுப்பவும் இந்த பயணம் மேற்கொள்ளப் படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த யாத்திரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
    • நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது

    அசாமில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடர்பாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்க உள்ள யாத்திரை அரசியல் காரணங்களுக்காக அல்ல. நாட்டின் ஏழை எளிய மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் வெறுப்புக்குப் பதிலாக அன்பு பரவ வேண்டும் " என்பதை இந்த யாத்திரையில் வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், வன்முறை காரணமாக மணிப்பூர் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மணிப்பூர் மக்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை நாட்டுக்கு சொல்லவே யாத்திரையை மணிப்பூரில் இருந்து தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

    நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு குறித்தும், நமது நாட்டின் விவசாயிகள் சந்தித்து வரும் பேரழிவு குறித்தும் இந்த யாத்திரையில் நாங்கள் பேசு இருக்கிறோம். இளைஞர்களுக்கு நீதி வேண்டும், பெண்களுக்கு நீதி வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், ஏழை எளிய மக்களுக்கு நீதி வேண்டும். இதை வலியுறுத்தவே இந்த யாத்திரையை தொடங்குகிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான மிகப் பெரிய மேடையாக இந்த யாத்திரை திகழும் என்றார்.

    நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 10% வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கே.சி வேணுகோபால், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு அனுமதி கோரி மணிப்பூர் தலைமைச் செயலருக்கு மணிப்பூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விண்ணப்பம் கொடுத்த நிலையில், அனுமதியை தங்களால் வழங்க முடியாது என்றும், டெல்லியில் இருந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் மணிப்பூர் அரசு கூறுவதாக காங்கிரஸ் அமைப்பு செயலாளர் குற்றம் சாட்டுகிறார். ஒரு மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்த விரும்பினால் அதற்கு டெல்லி அனுமதி வழங்க வேண்டுமா?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    • அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்.
    • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை.

    மணிப்பூர் மாநிலத்தில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. காவல் துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அசாம் ரைஃபில் கேம்ப்-இல் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. துப்பாக்கி சூடு மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களை தொடர்ந்து மணிப்பூரில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக இன்று பிற்பகல் 3.30 மணி முதலே கடுமையான துப்பாக்கி சூடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கி சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்தது.
    • அடையாளம் தெரியாத பறக்கும் தட்டால் வான்வெளி தற்காலிகமாக மூடல்.

    மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையம் அருகில் மர்மமான முறையில் பறக்கும் தட்டுகள் பறப்பதாக இந்திய விமானப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவற்றை தேடி பிடிக்கும் நோக்கில் இந்திய விமானப்படை இரண்டு ரஃபேல் ஜெட் விமானங்களை தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தியது.

    நேற்று (நவம்பர் 19) மதியம் சுமார் 2.30 மணி அளவில் இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறந்ததால், வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

    "இம்பால் விமான நிலையம் அருகில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு பறப்பதாக தகவல் கிடைத்ததும், அருகாமையில் உள்ள விமான தளத்தில் இருந்து இரண்டு ரஃபேல் போர் விமானங்கள் தேடுதல் வேட்டையில் களமிறக்கப்பட்டன. இந்த விமானத்தில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன."

    "போர் விமானம் வான்வெளியில் தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்திலேயே சென்று சந்தேகத்திற்குறிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இம்பால் விமான நிலையம் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பறக்கும் தட்டு பதிவாகி இருப்பதால், அதனை வைத்து தொடர் விசாரணை மற்றும் ஆய்வு நடைபெற்று வருகிறது," என பாதுகாப்பு துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
    • விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    மணிப்பூர் தலைநகர் இம்பாலாவில் விமான நிலையம் அருகே விமான கட்டுப்பாட்டில் உள்ள வான்வெளியில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று திடீரென பறந்தது.

    பிற்பகல் 2 மணியளவில் பறந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 3 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

    ரேடார் பதிவுகள், சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து மர்ம பொருளை கண்டறியும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
    • மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது.

    தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் காரணமாக கடந்த சில மாதங்களாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
    • கலவரம் காரணமாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

    மணிப்பூரில் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட மொபைல் இணைய சேவைகள் தற்போது நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் இன்று காலை வெளியிட்டார்.

    போலி செய்திகள், தகவல்கள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் பரவுவதை தடுக்கும் வகையில், அரசு மொபைல் இணைய சேவைகளை மே 3-ம் தேதியில் இருந்து தடுத்து நிறுத்தி வைத்து இருந்தது. இந்த தடை இன்று மாநிலம் முழுக்க நீக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியா மியான்மர் எல்லை வழியாக சட்டவிரோத ஊடுருவல்களை தடுத்து நிறுத்த மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், மத்திய அரசு மணிப்பூரில் உள்ள 60 கிலோமீட்டர் எல்லை பகுதியில் வேலி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

    • ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் ரிக்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளது.

    இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 11.1 மணியளவில் 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதமோ இதுவரை ஏற்படவில்லை.

    இதேதேபால், கடந்த ஜூலை 21ம் தேதி அன்று உக்ருல் மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வங்கக் கடலில் நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி சமூக நல்லிணக்க கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் ஏ.ஐ.பி.சி. பிரிவு சார்பில் மணிப்பூர், அரியானா வன்முறையை தடுக்க தவறியதாகவும், பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிப்பதாகவும் கூறி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் தென்மண்டல ஏ.ஐ.பி.சி. தலைவர் டாக்டர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முதலியார் பட்டி அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.

    வி.சி.க. மாவட்ட துணை செயலாளர் சித்திக் வரவேற்றார். நகர் மன்ற துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, கடைய நல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், ம.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் வெங்க டேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்ட கோஷங்களை நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஹலால் சலீம் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாவட்ட பொறு ப்பாளர் ஜெயபாலன், நகர செயலாளர் சாதிர், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×