search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட் 2019"

    இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோல்வி அடைந்தது மிகவும் காயப்படுத்தியதாகவும் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். பரபரப்பான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று 4-வது கோப்பையை இழந்தது.

    இந்த சீசனில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு எப்படி நுழைந்தோம் என்று திரும்பி பார்க்கும்போது சிறப்பாக ஆடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் வரிசை நன்றாக அமையவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம்.

    தோல்வி எப்போதுமே காயப்படுத்தும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.

    இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருதுகிறேன். கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவம் நடந்தன. இரு அணிகளின் பக்கமும் கோப்பை கைமாறிக்கொண்டு இருந்தன. ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

    தவறுகள் எந்தெந்த இடங்களில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரமில்லை. உலககோப்பை செல்ல வேண்டி இருக்கிறது.

    அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐ.பி.எல். தவறுகளை ஆராய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் டெலிவிசன் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று பதில் அளித்தார்.



    உலககோப்பையுடன் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக டோனியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளையாடுவேன் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
    மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு குட்டி ரசிகர் அளித்த சாபம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

    வெற்றி பெற்ற மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் குழப்பத்தை ஏற்படுத்தியது.  அதிலும் மூன்றாவது அம்பயர் கொடுத்த தீர்ப்பு தவறு என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



    இந்நிலையில் டோனி அவுட் குறித்து 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது கொண்டே பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் அச்சிறுவன் டோனி அவுட்டே இல்லை என்றும் சும்மானா அவுட்டுன்னு கொடுக்கறான். மூனாவது அம்பயர் தூக்கு மாட்டி செத்துடுவான் என்றும் அழுது கொண்டே கூறும் போது அச்சிறுவன் தாய் சமாதானப்படுத்துகிறார்.

    வீடியோவை காண..,

    ஐபிஎல் 2019 கோப்பையை மும்பை அணி கைப்பற்றிய நிலையில் இந்த சீசனில் பதிவான சாதனைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    ஐபிஎல் 2019 சீசனின் இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றது. 2-வது இடத்தை பிடித்த சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பதிவான சாதனை துளிகள் பற்றிய விவரத்தை பார்க்கலாம்.

    இந்த ஐபிஎல் சீசனில் மொத்த ஆட்டம் - 60
    சிக்சர்கள் - 785
    பவுண்டரிகள் - 1651
    விக்கெட்டுகள் - 682
    ரன்கள் - 19416
    சதங்கள் - 6
    அரை சதம் - 106
    அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் டெல்லி அணியை சேர்ந்த ஷிகர் தவான் - 64
    அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் கொல்கத்தா அணியை சேர்ந்த ரஸல் - 52
    அதிக பவுண்டரிகள் அடித்த அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் - 236
    அதிக சிக்சர்கள் விளாசிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 143
    ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் 232/2 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் 70 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
    நோ பால் விவகாரத்தில் கோபம் அடைந்த நடுவர் கதவை உடைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்தை சேர்ந்த நடுவர் நைஜல் லாங். ஐ.பி.எல். போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.



    இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் பெவிலியன் திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல். போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர்தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இதோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.
    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

    நேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.



    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
    விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றனர். #IPL2019 #CSKvsDC #Qualifier2
    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியின் பிளேஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து தகுதி பெற்றன.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து ‘லீக்‘ முடிவில் வெளியேற்றப்பட்டன.

    ‘பிளேஆப்’ சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. சேப்பாக்கத்தில் நடந்த ‘குவாலியர்-1’ ஆட்டத்தில் மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    நேற்று நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்து ‘குவாலிபையர்-2’ போட்டிக்கு தகுதி பெற்றது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி மும்பை இந்தியன்சுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இதனால் இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    3 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது. டெல்லியை 2 முறை ‘லீக்‘ ஆட்டத்தில் வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

    பெரோசாகோட்லாவில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 80 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.

    இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வந்த சென்னை அணி கடந்த சில போட்டியில் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. 7 போட்டியில் 5-ல் தோற்றது பரிதாபமே. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் மும்பையிடம் மிகவும் மோசமாக தோற்றது சி.எஸ்.கே. ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

    இதற்கு அணியின் மோசமான பேட்டிங்தான் காரணம். பந்து வீச்சு நல்ல நிலையில் இருந்தாலும் பேட்டிங் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. நாளைய முக்கியமான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவது அவசியம்.

    கேப்டன் டோனி ஒருவர் மட்டும் நிலையாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் 10 இன்னிங்சில் 405 ரன் குவித்துள்ளார். 7 முறை அவுட் ஆகாததால் அவரது சராசரி 135.00 ஆகும். அதிகப்பட்சமாக 84 ரன் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 138.69 ஆகும். 21 பவுண்டரியும், 23 சிக்சர்களும் அடித்துள்ளார்.

    டோனிக்கு அடுத்தபடியாக ரெய்னா 364 ரன்னும், டுபெலிசிஸ் 320 ரன்னும், அம்பதி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர்.

    வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே அதிரடியாக விளையாடினார். ஆனாலும் டோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

    சென்னை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். இம்ரான் தாகீர் (23 விக்கெட்), ஹர்பஜன்சிங் (14), ஜடேஜா (13) ஆகிய 3 சுழற்பந்து வீரர்களும் சேர்ந்து 50 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

    சேப்பாக்கம் ஆடுகளத்தில் தான் டோனி 3 சுழற்பந்து வீரரை பயன்படுத்துவார். விசாகப்பட்டினம் ஆடுகளத்துக்கு தகுந்தவாறு வீரர்களை முடிவு செய்வார். ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீரர் ஒருவர் இடம் பெறலாம். ‌ஷர்துல் தாகூர் அல்லது வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேகப்பந்து வீரர்களில் தீபக் சாஹர் நல்ல நிலையில் உள்ளார். அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    டெல்லி அணி ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடி இருப்பதால் ஆடுகளத்தை நன்றாக கணித்து இருக்கும். இதனால் சென்னை சூப்பர் கிங்சுக்கு அந்த அணியை வீழ்த்துவது சவாலானதே.

    டெல்லி அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது. தவான் (503 ரன்), ஷிரேயாஸ் அய்யர் (450), ரி‌ஷப் பந்த் (450), பிரித்விஷா (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இது தவிர இங்ராம், ருதர்போர்டு, கீமோபவுல் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

    பந்து வீச்சில் 25 விக்கெட் வீர்த்திய ரபடா இல்லாதது பாதிப்பே. இதை சரி செய்யும் வகையில் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் சர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10) ஆகியோர் உள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்சுக்கு பதிலடி கொடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் டெல்லி அணி உள்ளது.

    இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடுமையாக போராடுவார்கள் என்பதால் நாளைய ‘குவாலிபையர்2’ ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. #IPL2019 #CSKvsDC
    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பீஜிங் தலைநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. #ChinaExpo2019
    பீஜிங்:

    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 7 வரை 162 நாட்கள்  நடைபெற உள்ளது. 



    இந்த கண்காட்சிக்காக பிரம்மாண்ட பூங்கா பீஜிங்கின்  ‘நியூ சில்க் ரோட்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டின் வடிவமைப்பாளர்களான ஜேம்ஸ் ஸ்மித்தோ, ஜான் ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோர் இணைந்து பார்ப்பவர் வியக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இந்த பூங்காவானது இதய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  



    பீஜிங்கில் நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி, ‘லிவ் கிரீன், லிவ் பெட்டர்’ எனும் கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 110 நாடுகளில் இருந்து சர்வதேச அமைப்புகள் இதன் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டன. பீஜிங்கில் கடுமையான வறட்சி நிலவிவரும் நிலையில்  தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்த பூங்கா உலகின் அனைத்து பகுதிகளிலும் பசுமை வளர்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.



    இந்த பூங்காவின் வளாகங்கள், தோட்ட அமைப்புகள் மற்றும் கண்காட்சியின் பெயர் கொண்ட பதாகைகள் அனைத்தும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வண்ணமயமாக உள்ளது.



    ஏப்ரல் 28 ம் தேதி நடைபெற்ற இந்த பூங்காவின் துவக்க விழாவில் பல்வேறு விதமான கலைகள், நடனங்கள், மற்றும் மேடை அலங்காரங்கள் என பீஜிங் தலைநகரமே விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. இதனை காண வரும் பார்வையாளர்கள், சிறுவர்கள் என அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறி உள்ளது. #IPL2019 #DelhiCapitals #DC
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக லீக் சுற்றை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. ஏற்கனவே 2008, 2009, 2012-ம் ஆண்டுகளிலும் அடுத்த சுற்றை எட்டியிருந்தது. #IPL2019 #DelhiCapitals #DC
    ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரஸல் தட்டி சென்றார். #AndreRussell
    கொல்கத்தா:

    களம் இறங்கி விட்டால் ருத்ரதாண்டவமாடும் கொல்கத்தா வீரர் ந்த்ரே ரஸ்செல் (வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர்) நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 50 சிக்சர்களை (12 ஆட்டம்) நொறுக்கி இருக்கிறார்.



    ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 50 சிக்சர் அடித்த 2-வது வீரர் ரஸ்செல் ஆவார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் இரண்டு முறை (2012-ம் ஆண்டில் 59 சிக்சர், 2013-ம் ஆண்டில் 51 சிக்சர்) இவ்வாறு சிக்சர் மழை பொழிந்திருக்கிறார். #AndreRussell
    மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஸல் 3-வது வீரராக ஆடியது நல்ல முடிவு என வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். #IPL2019 #KKRvsMI
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா 5-வது வெற்றியை பெற்றது.

    ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன் குவித்தது.

    ஆந்த்ரே ரஸலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 40 பந்தில் 80 ரன்னும் (6 பவுண்டரி, 8 சிக்சர்), உஸ்மான் கில் 45 பந்தில் 76 ரன்னும் (6 பவுண்டரி, 4 சிக்சர்), கிறிஸ் லின் 29 பந்தில் 54 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்டியா, ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    233 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. இதனால் கொல்கத்தா 34 ரன்னில் வெற்றி பெற்றது.

    ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. ரஸலை மிரட்டும் வகையில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த ஆட்டம் பலன் அளிக்காமல் வீணானது. ஹர்திக் பாண்டியா தனி ஒருவராக போராடி 34 பந்தில் 91 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும்.

    சுனில்நரைன், ரஸல், குர்லே தலா 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    கொல்கத்தா அணி தொடர்ந்து ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

    வெற்றி குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    ஆந்த்ரே ரஸல் 3-வது வீரராக முன்னதாக களம் இறக்கப்பட்டது நல்ல முடிவாகும். அவர் ஒரு சிறப்பு மிக்க வீரர் ஆவார். அவரது வளர்ச்சியை நாங்கள் நேரில் பார்ப்பது சிறந்தது. மேலும் ஒரு அதிரடியான ஆட்டத்தை ரஸல் வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்தார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

    ஹர்திக் பாண்டியா ஆட்டம் அபாரமாக இருந்தது. ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள். தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் 5-வது தோல்வியை தழுவியது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறும்போது, “நாங்கள் வெற்றி இலக்கை நெருங்கி வந்துதான் 34 ரன்னில் தோற்றோம். ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவருக்கு ஆதரவாக எதிர் முனையில் வீரர்கள் இல்லை. கொல்கத்தா அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. பின்னர் வந்த ரஸல் விளாசி தள்ளி விட்டார். எஞ்சிய 2 ஆட்டங்களும் உள்ளூரில் விளையாடுவதால் மீண்டும் எழுச்சி பெறுவோம்” என்றார்.

    கொல்கத்தா அணி 13-வது ஆட்டத்தில் பஞ்சாப்பை மே 3-ந்தேதி சந்திக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அடுத்த போட்டியில் ஐதராபாத் அணியை மே 2-ந்தேதி சந்திக்கிறது. #IPL2019 #KKRvsMI
    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #WorldCup2019 #ABdeVilliers
    புதுடெல்லி:

    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.

    உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.

    உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே-ஆப் சுற்றுப் போட்டிகள் துவங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019
    புதுடெல்லி:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கிறது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று சென்னையில் மே 7-ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 8-ம் தேதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் மே 10-ம் தேதியும், இறுதிப்போட்டி ஐதராபாத்தில் மே 12-ம் தேதியும் நடக்கிறது. 

    தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.

    முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் அரை மணி நேரம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது. #IPL2019
    ×