search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி - சீனாவில் கோலாகலம்
    X

    உலகின் பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி - சீனாவில் கோலாகலம்

    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உலகிலேயே பிரம்மாண்டமான சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனால் பீஜிங் தலைநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. #ChinaExpo2019
    பீஜிங்:

    சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்று சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 7 வரை 162 நாட்கள்  நடைபெற உள்ளது. 



    இந்த கண்காட்சிக்காக பிரம்மாண்ட பூங்கா பீஜிங்கின்  ‘நியூ சில்க் ரோட்’ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டின் வடிவமைப்பாளர்களான ஜேம்ஸ் ஸ்மித்தோ, ஜான் ஸ்டூவர்ட் ஸ்மித் ஆகியோர் இணைந்து பார்ப்பவர் வியக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். இந்த பூங்காவானது இதய வடிவமைப்பைக் கொண்டுள்ளது.  



    பீஜிங்கில் நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி, ‘லிவ் கிரீன், லிவ் பெட்டர்’ எனும் கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 110 நாடுகளில் இருந்து சர்வதேச அமைப்புகள் இதன் தொடக்க விழாவில் கலந்துக் கொண்டன. பீஜிங்கில் கடுமையான வறட்சி நிலவிவரும் நிலையில்  தண்ணீரை சேமிக்கும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

     

    இந்த பூங்கா உலகின் அனைத்து பகுதிகளிலும் பசுமை வளர்ச்சியை எடுத்துரைக்கும் விதமாக அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.



    இந்த பூங்காவின் வளாகங்கள், தோட்ட அமைப்புகள் மற்றும் கண்காட்சியின் பெயர் கொண்ட பதாகைகள் அனைத்தும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வண்ணமயமாக உள்ளது.



    ஏப்ரல் 28 ம் தேதி நடைபெற்ற இந்த பூங்காவின் துவக்க விழாவில் பல்வேறு விதமான கலைகள், நடனங்கள், மற்றும் மேடை அலங்காரங்கள் என பீஜிங் தலைநகரமே விழாக்கோலத்துடன் காட்சியளித்தது. இதனை காண வரும் பார்வையாளர்கள், சிறுவர்கள் என அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×