search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL2019"

    இறுதிப்போட்டியில் மும்பையிடம் தோல்வி அடைந்தது மிகவும் காயப்படுத்தியதாகவும் அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதாகவும் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். பரபரப்பான இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 ரன்னில் மும்பையிடம் தோற்று 4-வது கோப்பையை இழந்தது.

    இந்த சீசனில் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு எப்படி நுழைந்தோம் என்று திரும்பி பார்க்கும்போது சிறப்பாக ஆடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் வரிசை நன்றாக அமையவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்து விட்டோம்.

    தோல்வி எப்போதுமே காயப்படுத்தும். இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடி இருக்கலாம்.

    இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக இருந்ததாக கருதுகிறேன். கடைசி பந்து வரை பரபரப்பு ஏற்பட்டது. இரு அணிகளிலுமே நிறைய வேடிக்கையான சம்பவம் நடந்தன. இரு அணிகளின் பக்கமும் கோப்பை கைமாறிக்கொண்டு இருந்தன. ஏனென்றால் இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தன. ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது தேவையோ அப்போது சரியாக விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

    தவறுகள் எந்தெந்த இடங்களில் செய்தோம் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரமில்லை. உலககோப்பை செல்ல வேண்டி இருக்கிறது.

    அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐ.பி.எல். தவறுகளை ஆராய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த ஐ.பி.எல். போட்டியில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் டெலிவிசன் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஆம் நம்பிக்கை இருக்கிறது என்று பதில் அளித்தார்.



    உலககோப்பையுடன் டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக டோனியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விளையாடுவேன் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் ஆரவாரம் அடைந்தனர்.
    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாக சென்னை அணியின் பொறுப்பு கேப்டன் ரெய்னா கூறினார். #IPL2019 #SRHvCSK
    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை சாய்த்தது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 132 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த எளிய இலக்கை டேவிட் வார்னர் (50 ரன்), ஜானி பேர்ஸ்டோ (61 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் ஐதராபாத் அணி 16.5 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பிய ஐதராபாத் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது.

    தோல்விக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், ‘இந்த தோல்வி, எங்களுக்கு நல்லதொரு எச்சரிக்கையாகும். நாங்கள் போதுமான அளவுக்கு ரன்கள் எடுக்கவில்லை. பிளிஸ்சிஸ்- ஷேன் வாட்சன் ஜோடி (முதல் விக்கெட்டுக்கு 79 ரன்) அருமையான தொடக்கம் அமைத்து தந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம். தொடக்க ஜோடி பிரிந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது பின்னடைவாகி விட்டது. பந்துகளை வீணாக்காமல் ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தொடர்ச்சியாக எடுத்திருக்க வேண்டும். எது எப்படியோ 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம்.

    முதுகில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக டோனிக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. தற்போது அவர் நன்றாக இருப்பதாக உணர்கிறார். அனேகமாக அடுத்த ஆட்டத்தில் (21-ந்தேதி பெங்களூருவுக்கு எதிராக) அவர் விளையாடுவார்.’ என்றார்.

    சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ‘இந்த தொடரில் முதல்முறையாக இது போன்ற ஒரு (மோசமான) ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்த குறைபாட்டை வீரர்கள் எப்படி சரி செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

    தோல்வி குறித்து அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. பலவீனமான பகுதியை கண்டறிந்து அதை திருத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    இந்த ஆட்டத்தில் முதல் 10 ஓவர்கள் வரை சிறப்பாக பேட் செய்தோம். அதன் பிறகு நெருக்குதலுக்கு உள்ளாகி, விக்கெட்டுகளை வேகமாக இழந்தோம். அதாவது ஐதராபாத் பவுலர்கள் அபாரமாக பந்து வீசினர். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. 170 ரன்கள் வரை எடுத்திருந்தால் அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும்’ என்றார். #IPL2019 #SRHvCSK
    ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் இன்று மோதுகின்றன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைஸ் ஐதராபாத்தையும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 37 ரன்னில் மும்பை இந்தியன்சையும் தோற்கடித்தன.

    4-வது ‘லீக்‘ ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    எந்த அணி வெற்றியுடன் கணக்கை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடைக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் விளையாடுகிறார். அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தானை முன்னேற்றம் அடைய செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    கேப்டன் ரகானே, ஆர்ச்சர், பட்லர் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல், ஹென்ரிகலை, டேவிட் மில்லர் போன்ற சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்.

    இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 ஆட்டத்திலும், பஞ்சாப் 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. #IPL2019 #RajasthanRoyals #KingsXiPunjab
    ×