என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harbajan singh"

    • இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.
    • இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 93 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந்தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.

    இந்தநிலையில் ஆடுகளம் தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    இதுபோன்ற ஆடுகளங்களால் டெஸ்ட் கிரிக்கெட் அழித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். டெஸ்டுக்கு எந்த மதிப்பும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் நன்றாக விளையாடியதால் அனைவரும் இந்திய அணியை பாராட்டினார்கள்.

    அங்கே பிட்ச்கள் நன்றாக இருந்த காரணத்தாலேயே இந்தியா போராடி வென்றது. ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு ஆடுகளம் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை.

    இந்த நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது தவறான விளையாட்டு முறை. இது போன்ற ஆடுகளங்கள் வீரர்களை முன்னேற அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    துபாய்:

    ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

    எல்லையில் நமது வீரர்கள் உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கும்போது, நாம் எப்படி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட முடியும்?

    இது மிகவும் சாதாரண விஷயம். ஒரு கிரிக்கெட் போட்டியைத் தவிர்ப்பதால் ஒன்றும் குறைந்துவிடாது.

    நமது ராணுவ வீரர்களின் தியாகம் மகத்தானது, அதனுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் எல்லாம் ஒன்றுமே இல்லை.

    எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும்போதும், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடிக்கும்போதும், நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது சரியாக இருக்காது.

    இந்தப் பெரிய பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை கிரிக்கெட் என்பது மிகவும் சிறிய விஷயம். தேசமே எப்போதும் முதன்மையானது

    ரத்தமும் நீரும் ஒன்றாக ஓடமுடியாது என்பது நமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    • இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரஜினி

    ரஜினி

    நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    ஹர்பஜன் சிங் - ரஜினி

    ஹர்பஜன் சிங் - ரஜினி

    இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    • இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் ரஜினிகாந்த்தை காண காத்திருக்கின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவரகள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "செப்பு மிங்கிளாகி வரும் தங்கம் அல்ல அவர்.. எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்..!!" சூப்பர் மனிதர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இந்த அற்புத கலைஞனின் பெயரை காற்றில் அல்ல காலத்தில் எழுதி வைத்துள்ளது கலை - நீடூழி வாழ்க தலைவா!" என்று பதிவிட்டு அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரூதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.
    புதுடெல்லி:

    ஐபிஎல் போட்டிகளின் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்து இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

    நேற்று நடந்த குவாலிபையர்-2 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை ஹர்பஜன் சிங் அவுட்டாக்கினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற பட்டியலில் இணைந்தார்.

    ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா 169 விக்கெட்டுகள் எடுத்து  முதலிடத்திலும், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 156 விக்கெட் எடுத்து இரண்டாவது இடத்திலும், 150 விக்கெட் எடுத்த கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் ஹர்பஜன் சிங்கும் இணைந்துள்ளார்.
    ×