search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத்தொகை"

    • இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    நெல்லை:

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இல்லத்தரசிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-



     


    சுதா (நெல்லை புதுப்பேட்டை)

    நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை எனது வங்கி கணக்கில் நேற்றே வந்து சேர்ந்துவிட்டது. இதற்கான குறுந்தகவல் எனது போனுக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தொகை எனது மகன்களின் டியூசன் கட்டணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வாங்கி கொள்வேன். அரசுக்கு மிக்க நன்றி.



     


    கவிதா (செங்கோட்டை)

    எனது கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். ரூ.1000 உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் தனி ஆளாக வேலைக்கு சென்று சிரமப்பட்டு வருகிறார். கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இந்த தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.



     


    சண்முக சுந்தரி (செங்கோட்டை)

    ரூ.1000 உரிமை தொகைக்காக முன்னோட்டமாக எனது வங்கி கணக்கில் 10 பைசா ஏற்றப்பட்ட குறுந்தகவல் வந்தது. இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றே எனக்கு பணம் ஏறிவிட்டது. எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். 2 கைக்குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன். திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சாந்தா (நெல்லை சந்திப்பு)


     


    அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இன்று முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் நேற்றே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விட்டது. நான் இன்று காலையிலேயே அந்த தொகையில் ரூ.300-க்கு எனது போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டேன். இப்போது கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்க போகிறேன். மாதத்தில் 10 நாட்களுக்கு எங்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.



     


    ஜீவா (ஆலங்குளம்)


     


    பெண்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சிறு சேமிப்பு தொகையாக இது உள்ளது. மாதந்தோறும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தை பெற வங்கிக்கு அலைவதை தவிர்த்து அதற்கு எளிய வழிமுறை ஏதேனும் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    செல்வி (கீழப்பாவூர்)



     


    எனது கணவர் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைத்ததனால் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரையில் தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    முனீஸ்வரி (தூத்துக்குடி திரேஸ்புரம்)


     


    எனக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்க பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீட்டின் சிறு சிறு அவசர தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    மேரி பிரான்சிஸ் (தூத்துக்குடி குரூஸ்புரம்)


     


    மகனின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வரும் எனக்கு கலைஞரின் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க பெற்றதால் சுய தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்காமல் செலவு செய்ய உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ராதா (தூத்துக்குடி ஆரோக்கியபுரம்)


     


    இட்லி வியாபாரம் செய்யும் எனக்கு ரூ. 1,000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். இதன் மூலம் எனது பேத்தியின் படிப்புக்கும், தினசரி செலவிற்கும் உதவி கரமாக இருக்கும்.

    • 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர்
    • அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற சிறப்பு முகாம்கள் மூலம் 3 லட்சத்து 36 ஆயிரத்து 682 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இது வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டு தாரர்களில் 73 சதவீதம் ஆகும்.

    மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தில் தவறான தகவல் கொடுத்தவர்களிடம் அதிகாரிகள் வீடு வீடாக சென்று தகவல்களை சரி பார்த்தனர்.

    மகளிர் உரிமைத் தொகை பணத்தை பெற வங்கிகள் மூலம் முதற்கட்டமாக 8 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகளில் 6 ஆயிரம் ஏ.டி.எம். கார்டுகள் வந்துள்ளன.

    தற்போது வந்துள்ள ஏ.டி.எம். கார்டுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்பது வரும் 15-ம் தேதிக்கு பிறகு தெரியவரும். முதற்க ட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1 அனுப்பி சரி பார்க்கப்படும்.

    மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்க பட்ட வர்களின் சந்தேகங்களை தீர்க்க கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

    சிறப்பு முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெற நிராகரிக்கப்ப ட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம்.
    • மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

    ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியிருப்பதவாது:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.

    அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் - ஆயிரம் ரூபாயை மாதாமாதம் - ஆண்டு தோறும் பெறப் போகிறார்கள்.

    அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் - அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதனை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் பொறுப்பும் கடமையும் அதிகாரிகளாகிய உங்களுக்கு இருக்கிறது.

    ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கின்ற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். 

    அதேபோல்தான் சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்டபெயரும், என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

    எனவே எந்த இடத்திலும் - எந்தச் சூழலிலும் - எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லி வருவதை, தற்போதும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும்.

    ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது, அதிலும் கவனமாக இருக்க வேண்டும். 

    அதேபோல், வரும் 15-ஆம் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய Toll-Free எண்ணும் சேர்க்கப்பட வேண்டும்.

    இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்கள் என நாம் தேர்ந்தெடுத்துள்ளது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.

    அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்குச் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும்.

    அப்படி அனுப்பினால் பெரும்பாலானவர்கள் மனநிறைவு அடைவார்கள்.

    சிலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம் - மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பை

    நாம் வழங்க வேண்டும். வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும்.

    வருகிற 15-ஆம் நாள் அன்று மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான விழா நடக்க இருக்கிறது. பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் யாராவது அந்த இடத்துக்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, 'நாங்கள் பரிசீலிக்கிறோம்' என்பதைச் சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். இது மிகமிக முக்கியமாகும்.

    இதைச் செய்யாவிட்டால், ஏதாவது ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும்.

    அதனால் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கும் வங்கிகளுக்கும் - வங்கிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும்.

    மாதத்தில் முதல் ஒருவார காலம் இந்த திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் மாபெரும் திட்டம் இது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம் தோறும் பயனடையும் திட்டம் இது. எனவே, இத்திட்டம் குறித்து தொடர்ந்து நாம் மக்களிடம் எடுத்துச்சொல்லி வர வேண்டும். 

    * மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம்

    * முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

    * புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியருக்கு 1000 ரூபாய்

    * இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டம்

    * மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் கலைஞர் உரிமைத் திட்டம் - ஆகிய 5 திட்டங்களைப் பற்றியும் திரும்பத் திரும்ப மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

    எந்த ஒரு திட்டமாக இருந்தாலும், அதனை முறையாகச் செயல்படுத்தினாலே, அதனால் பயனடைந்தவர்கள் மிகப்பெரிய அளவுக்கு நம்மைப் பாராட்டி பேசுவார்கள்.

    அத்தகைய பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்

    இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
    • 72.21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 ரேசன் கடைகள் உள்ளன. அவற்றில் 4,32,038 குடும்ப அட்டைகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்டமாக பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில் 24.07.2023 முதல் 4.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,49,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    2ம் கட்டமாக தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் போடி வட்டத்தில் 05.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,33,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்கள் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவற்றில் 3ல் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப்பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பட்டுள்ளது. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    • விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.
    • ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.

    மேலும் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு? சொந்த நிலம் இருக்கிறதா? என்ன வேலை செய்கிறீர்கள்? குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பணியில் உள்ளனர்? அரசு பணியில் உள்ளனரா? சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் உள்ளதா? என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன.

    • ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது.
    • இதில் விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டங்களாக ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில் முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி இன்று, நாளை, நாளை மறுநாள் என 3 நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்கள், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் திட்டங்களில் முதியோர் ஓய்வூதிய பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை தராத இயலாத குடும்பத் தலைவிகள் மேற்கண்ட இந்த 3 நாட்களில் சிறப்பு முகாமில் பங்கேற்று பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப் பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

    இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு முகாம் தொடங்கியது. இதில் பல்வேறு காரணங்களுக்காக விடுபட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

    • முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பபதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

    முதற்கட்டமாக 771 முகாம்களும், 2-ம் கட்டமாக 240 முகாம்களும் நட த்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது "வருவாய் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும், இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும்'', முதற்கட்ட முகாம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்க தவறிய பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் வகையில் நாளை 18-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு முகாம்கள் ஏற்கனவே முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்ட முகாம்கள் நடைபெற்ற இடங்களில் நடத்தப்பட உள்ளன. எனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேற்கண்ட தகுதிவாய்ந்த பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிறப்பு முகாமில் விண்ண ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை பயன்படுத்து குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் 05.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி ரோட்டரி அரங்கத்தில் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன் கலந்துரையாடினார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் கடந்த 24.7.2023 முதல் தொடங்கப்பட்டு இன்றுடன் (4.08.2023) நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் நடைபெறும் 2-ஆம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களின் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி இன்று நடைபெற்றது.

    இப்பயிற்சியில் விண்ணப்பதிவு தன்னார்வலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், விண்ணப்பத் தாரர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை சரியாக பூர்த்தி செய்திடவும், பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக பராமரித்திடவும், இத்திட்ட விண்ணப்ப பதிவிற்கான இணையதளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது
    • 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடகா அரசு திறக்க கோரியும், விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் வருகிற 10-ந் தேதி காலை 10 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடக்கிறது.

    சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்கிறார்.

    தே.மு.தி.க. துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி-தஞ்சாவூர், ஏ.ஆர்.இளங்கோவன்-கோவை பேராசிரியர் மகாலெட்சுமி-திருவள்ளூர் இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி-விழுப்புரம்.

    மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத்-நாமக்கல், சுபமங்களம் டில்லிபாபு-செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதே போல் 37 மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    • சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.
    • தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கேரள எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய், தேயிலை தோட்டத்துக்கு ஏராளமான தமிழக தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

    சின்னமனூர், கம்பம், அய்யம்பட்டி, தர்மத்துப்பட்டி, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி, குரங்கணி, கொட்டக்குடி, முந்தல் பகுதியில் இருந்து ஜீப் மூலம் ஏலக்காய் தோட்டத்துக்கு தினசரி தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். மேலும் நிரந்தர தொழிலாளர்கள் கேரளாவில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள நிரந்தர முகவரியை வைத்து ரேசன் பொருட்கள் மற்றும் கல்வி, வருவாய்த்துறை திட்டங்களில் பயன் அடைந்து வருகின்றனர். சிலர் கேரளாவிலும் குடியுரிமை பெற்று அந்த மாநில நலத்திட்டங்களிலும் பயன் அடைந்து வருகின்றனர்.

    எனவே இருமாவட்ட நிர்வாகமும் இரட்டை குடியுரிமையை ரத்து செய்து ஏதாவது ஒரு இடத்தில் வாக்களிக்க முகாம்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    2 கட்டமாக பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. எனவே கேரள தோட்ட தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து தமிழகம் வருகின்றனர். அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தை பெற்று ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    மேலும் திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தேனிக்கு வருகின்றனர். இந்த திட்டம் கீழ்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊர்திரும்பி முகாம்களில் விண்ணப்பித்து வருகின்றனர். அதிகாரிகள் இதில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் தெரிவித்தார்.
    • தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்மம்பட்டியில் நடைபெற்ற கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்ற முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பதிவேற்ற முறைகள், பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் செப்டம்பர்-15 ம் தேதி முதல் வழங்க இருக்கும் நிலையில், தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம்கள் அடுத்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். எனவே பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு அனைவரும் அந்தந்த பகுதியிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வீரக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்வி காங்கேயன், ஊராட்சி செயலர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • அமைச்சர் ஆர்.காந்தி திடீர் ஆய்வு
    • காலதாமதங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் நெமிலி,வேட்டாங்குளம், நெடும்புலி,பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காண விண்ணப்பம் பதிவேற்றும் முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது இதுவரை இணையத்தில் பதிவேற்றம் செய்த விவரங்கள் குறித்தும், பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள், காலதாமதங்கள் ஏற்படு வதற்கான காரணங்கள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் மகளிர் உரிமை தொகை படிவங்களை உரிய நேரத்தில் விடுபடாமல் அனைத்து விபரங்களையும் பதி வேற்றம் செய்யப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சப் -கலெக்டர் பாத்திமா, நெமிலி தாசில்தார் பாலசந்தர், நெமிலி சேர்மன் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாதேவி (நெமிலி), கவிதா (பனப்பாக்கம்), லதா (காவேரிப்பாக்கம்), உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×