search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை சரிபார்ப்பு பணி 72 சதவீதம் நிறைவு
    X

    வீடுகளுக்கு சென்று சரிபார்க்கும் பணிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை சரிபார்ப்பு பணி 72 சதவீதம் நிறைவு

    • 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.
    • 72.21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்களில் பெறப்பட்ட 3,00,880 விண்ணப்பங்களில் 1,09,987 விண்ணப்பங்கள் மீது கள சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஷஜீவனா பொம்மைய கவுண்டன்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 517 ரேசன் கடைகள் உள்ளன. அவற்றில் 4,32,038 குடும்ப அட்டைகள் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்டமாக பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் வட்டத்தில் 24.07.2023 முதல் 4.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,49,188 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    2ம் கட்டமாக தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் போடி வட்டத்தில் 05.08.2023 முதல் 11.08.2023 வரை நடைபெற்ற முகாமில் 1,33,646 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18.08.2023 முதல் 20.08.2023 வரை நடைபெற்ற சிறப்பு முகாமில் 18,046 விண்ணப்பங்கள் என மொத்தம் 3,00,880 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    இவற்றில் 3ல் ஒரு பங்கு என 1,09,987 விண்ணப்பங்கள் கள சரிபார்ப்பு பணிகளுக்கு அனுப்பட்டுள்ளது. கள சரிபார்ப்பதற்காக 517 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 72. 21 சதவீத கள சரி பார்க்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 5ம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×