search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மம்பட்டியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்
    X

    முகாமில் அமைச்சர் இ.பெரியாசாமி, கலெக்டர் பூங்கொடி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கும்மம்பட்டியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்

    • ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் தெரிவித்தார்.
    • தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்மம்பட்டியில் நடைபெற்ற கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்ட விண்ணப்பங்கள் பதிவேற்ற முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் பூங்கொடி ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பதிவேற்ற முறைகள், பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது பேசிய அமைச்சர் இ.பெரியசாமி, தமிழக முதல்-அமைச்சர் அறிவித்துள்ளபடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் உதவித்தொகை வரும் செப்டம்பர்-15 ம் தேதி முதல் வழங்க இருக்கும் நிலையில், தினசரி காலை 50 விண்ணப்பங்கள், மாலையில் 50 விண்ணப்பங்கள் என 100 விண்ணப்பங்களை பதிவேற்றும் வகையில் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த முகாம்கள் அடுத்த ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். எனவே பொதுமக்களின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு அனைவரும் அந்தந்த பகுதியிலேயே விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், வீரக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தங்கவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்வி காங்கேயன், ஊராட்சி செயலர் முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×