search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்"

    • டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.
    • உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடக தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாரகிராம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று திடீரென ஆயிரக்கணக்கான பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த பயனர்களின் சமூக வலைதள கணக்குகள் தான் அதிக அளவு முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயனர்கள் புதிய டுவிட்டுகளை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

    அவர்களுக்கு நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டிவிட்டீர்கள். அதனால் டுவிட் செய்ய முடியாது என குறுஞ்செய்தி வந்தது. இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதே போல பேஸ்புக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளும், 7 ஆயிரம் இன்ஸ்டாரகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து டுவிட்டர் கணக்குகளை சரி செய்யும் முயற்சியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறும்போது "சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். இதற்காக மன்னிக்கவும், இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்து உள்ளது.

    உலகம் முழுவதும் திடீரென டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

    • ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் தங்களால் புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.
    • பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என தவறான தகவல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    சமூக ஊடக வலைதளங்களான டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி தங்கள் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    ஆனால் தற்போது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளிகளை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக அமெரிக்காவில் அதிகபட்சமாக செயல் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான டுவிட்டர் பயனாளிகள் தங்களால் புதிய பதிவுகளை பதிவிட முடியவில்லை என ஆதங்கப்படுகின்றனர்.

    இதற்கு காரணம் நீங்கள் பதிவு அனுப்புவதற்கான தினசரி வரம்பை தாண்டி விட்டீர்கள் என தவறான தகவல் வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    எலான் மஸ்க் என்பவர் அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பின்னர் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை குறைத்தார். இதனால் தான் இந்த குறைபாடுகள் வருவதாக டுவிட்டரை பயன்படுத்துபவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்த சிக்கலை அறிந்து இருப்பதாகவும், அதனை சரி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    உங்களில் சிலருக்கு டுவிட்டர் எதிர்பார்த்தபடி செயல்படாமல் இருக்கலாம். சிக்கலுக்கு மன்னிக்கவும். இதனை சரி செய்வதற்கு நாங்கள் விழிப்புணர்வுடன் செயலபட்டு வருவதாகவும் டுவிட்டர் ஆதரவு தெரிவித்துள்ளது.

    12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். 7 ஆயிரம் இன்ஸ்டாகிராம் பயனாளிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.
    • டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார்.

    இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

    இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம். குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும்.

    நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது.
    • அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

    சான்பிரான்சிஸ்கோ:

    உலகம் முழுவதும் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அமெரிக்க பேஸ்புக் பயனர்களின் தகவல்களை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்த அனுமதித்ததாக பேஸ்புக் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6000 கோடி) தொகையை அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    அபராத தொகையை செலுத்தி இருந்தாலும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. பயனர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நலன் கருதியே இந்த அபராத தொகையை அளிக்க சம்மதித்து உள்ளோம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார்.
    • டொனால்டு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் செய்தார்.

    புதுடெல்லி :

    அமெரிக்காவின் பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருப்பவர் டொனால்டு (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது.).

    இவர் இந்தியாவில் உள்ள ரோஷி என்ற பெண்ணுடன் (பெயர் மாற்றித்தரப்பட்டுள்ளது) 'பேஸ்புக்' மூலம் தொடர்பு கொண்டு அறிமுகமானார்.

    இருவரிடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பு, அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்கிறவரை வளர்ந்தது. இவர்கள் அடிக்கடி 'வீடியோ சாட்' மூலம் ஆபாசமாக பேசிக்கொள்வதும், ஆபாசமாக தோன்றுவதும் தொடர்ந்துள்ளது.

    இதைத் தகவல் தொழில்நுட்ப வசதியால் மோப்பம் பிடித்த டெல்லி அசோலா பகுதியை சேர்ந்த ராகுல் குமார் என்பவர் பதிவு செய்தார். அதைத் தனக்கு சாதகமாக அவர் பயன்படுத்த முடிவு செய்தார்.

    இது தொடர்பாக அவர் அமெரிக்க பேராசிரியர் டொனால்டுடன் தொடர்பு கொண்டார். " நீங்கள் அந்தப் பெண்ணுடன் ஆபாசமாகப்பேசியது, நடந்து கொண்டது தொடர்பான அனைத்தையும் நான் பதிவு செய்து வைத்துள்ளேன்.

    நீங்கள் எனக்கு இந்தத் தொகையை பேபால் கணக்கின் (ஜி பே போன்றது) வழியாக அனுப்பி வைக்க வேண்டும். அனுப்பாவிட்டால் சமூக ஊடகங்களில் உங்கள் லீலைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவேன்" என இ-மெயில் வாயிலாக மிரட்டி உள்ளார்.

    இப்படி அவ்வப்போது மிரட்டி பணம், விலை உயர்ந்த பொருட்களைப் பெற்றுள்ளார். 48 ஆயிரம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.39 லட்சம்) இப்படி மிரட்டியே ராகுல்குமார் கறந்துள்ளார்.

    ஆனாலும் அவர் பேராசிரியர் டொனால்டுவை மிரட்டுவதை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் 'பொறுத்தது போதும், பொங்கியெழு' என்ற நிலைக்கு பேராசிரியர் டொனால்டு போனார்.

    அவர் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிடம் (எப்.பி.ஐ.), இந்தியர் ஒருவரால் தான் மிரட்டி பணம் பறிக்கப்படும் பிரச்சினை பற்றி புகார் செய்தார். அந்த அமைப்பினர், புகாரை டெல்லி சி.பி.ஐ.யின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ராகுல் குமார் வீடடில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தினர். முக்கிய தடயங்களை கைப்பற்றினர். மேலும் ராகுல் குமாரை கைது செய்தனர்.

    அவரிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி டெல்லி ரவுஸ் அவினியு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • செலவுகளைக் குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும்

    பிரபல சமூக வலைத்தளமன பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து 11000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இத்தகவலை அறிவித்துள்ளது. வருவாய் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 11000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    'மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000-க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்' என பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

    குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வார அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • எம்.எஸ்.டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.
    • டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    ராஞ்சி:

    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட அவர் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார்.

    இந்த நிலையில் டோனி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இன்று (25-ந்தேதி) மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

    பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி வெளியிடும் முக்கிய தகவல் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்தனர். டோனி ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலக போவதாக சிலர் பதிவிட்டனர்.

    டோனி புதிய தொழில் தொடங்குவது அல்லது சினிமா படம் தயாரிப்பது பற்றி தகவல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அதை பற்றி தெரிவிப்பார் என்றும் ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்பு விடைபெற விரும்புகிறேன் என்று டோனியும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் அவர்களுக்கு பல்வேறு வழிகளை காட்டுகிறது.
    • தூத்துக்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண் பேஸ்புக் மூலம் பலருடன் பழகி ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு வாலிபரின் கொலைக்கும் காரணமாக இருந்துள்ளார்.

    ராஜபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் திடீரென மாயமான அவர் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரைக்கும் (32), மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், வில்வதுரை மற்றும் 2 பேர் மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சாக்குபையில் வைத்து கட்டி கண்மாயில் வீசி சென்றது தெரியவந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக விசாரித்த போது, வில்வதுரை தற்போது அங்கு இல்லை என்ற தகவல் கிடைத்தது.

    இதற்கிடையே அவர் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போது அவர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த வில்வதுரையை பிடித்தனர்.

    அப்போது அவருடன் தங்கியிருந்த கூட்டாளிகள் இசக்கிராஜா (32), ரவிக்குமார் (29) ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    மாரிமுத்துவுக்கு பேஸ்புக் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி (வயது26) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை பணக்கார வீட்டு பெண் என்று கூறி பழகி வந்துள்ளார். மாரிமுத்துவும், ராகினியும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராகினி தனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் வேண்டும் என்று மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய மாரிமுத்து உடனடியாக ராகினியின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் அனுப்பியுள்ளார்.

    அதன்பின்னர் ராகினி, மாரிமுத்துவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை ராகினி ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாக மாரிமுத்து கருதினார். அதனை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மாரிமுத்துவின் உறவினரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரை என்பவருடனும் ராகினி பேஸ்புக் மூலம் பழகி தனது காதல் வலையில் அவரை சிக்க வைத்துள்ளார்.

    வில்வதுரை மட்டுமின்றி அவரது உறவினர்கள் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் ராகினியுடன் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது வில்வதுரை, ராகினிக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

    பின்னர் வில்வதுரை மூலம் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் இருந்து ராகினி லட்ச, லட்சமாக பணம் பறித்துள்ளனர். அவர் ரூ.50 லட்சத்துக்கு மேல் பணம் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த மாரிமுத்து, ராகினிக்கு அடிக்கடி போன் செய்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வற்புறுத்தி வந்தார்.

    இது ராகினிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இதுபற்றி வில்வதுரையிடம் தெரிவித்து, மாரிமுத்துவை தீர்த்து கட்டும்படி கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து வில்வதுரை, மாரிமுத்துவிடம் ராகினி வாங்கிய பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். எனவே நீ என்னுடன் வந்தால் பணத்தை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மாரிமுத்து கடந்த மாதம் 28-ந் தேதி வில்வதுரையுடன், காரில் சென்றார்.

    மாரிமுத்துவை காரில் அழைத்து சென்ற வில்வதுரையுடன் கூட்டாளிகளான இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சங்கரன்கோவில் அருகே ஒரு கண்மாய் பகுதியில் சென்றதும் மாரிமுத்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் அவரது உடலை சாக்கு பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம்-புனல்வேலி செல்லும் சாலையில் வந்ததும் அந்த பகுதியில் உள்ள இரட்டை கண்மாய் பகுதியில் வீசி சென்று விட்டனர். இது தொடர்பாக துப்புதுலக்கிய போலீசார் மாரிமுத்துவை கொலை செய்த வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் மாரிமுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்டது ராகினி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகினி எத்தனை பேரிடம் பண மோசடி செய்தார். அவருக்கு பின்னணியில் யார், யார்? உள்ளனர்.

    ராகினி சினிமா வில்லி போல் செயல்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த இசக்கிராஜா மனைவி இளவரசியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    ராகினி, இளவரசி ஆகியோர் எவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன.
    வாஷிங்டன்:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் மணீஷ் சேத்தி. 2012-ல் பாவ்லோக் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் எதிர்பார்த்த லாபம் வரவில்லை. இதற்கு காரணம் அவர் நீண்ட நேரம் சமூக வலைதளமான பேஸ்புக்கில் செலவிட்டது.

    தன்னுடைய தொழிலை முன்னுக்கு கொண்டு வரவும், நிறைய லாபம் சம்பாதிக்கவும் ஒரு புது ஐடியாவை கையில் எடுத்தார். அதனால், இனிமேல் தேவையில்லாமல் பேஸ்புக் பார்க்கக் கூடாது என்று முடிவு செய்தார். ஆனாலும் அவரால் பேஸ்புக் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதனால், ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினார். அவரது பெயர் காரா.

    சேத்தியை பேஸ்புக் பார்க்க விடாமல் தடுப்பதே காராவின் வேலை. அவர் சேத்தியின் அருகிலேயே உட்கார்ந்து சேத்தி எப்போதெல்லாம் பேஸ்புக் பக்கம் போகிறாரோ, அப்போதெல்லாம் சேத்தியின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட வேண்டும். இதற்கு காராவுக்கு தரப்பட்ட சம்பளம், ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள்.

    இப்போது காரா வந்த நேரம், சேத்தியின் கம்பெனி ஆஹா ஓஹோவென வளர்ந்து விட்டது. உற்பத்தியும் பெருகி விட்டது. அதாவது காரா வந்தபிறகு, அந்த நிறுவனத்தின் உற்பத்தி திறன் 98 சதவீதம் அதிகரித்துவிட்டது.

    காராவை வேலைக்கு அமர்த்தியது முதல், கம்பெனி வளர்ச்சி பெற்றது வரை சமூக வலைத்தளங்களில் அத்தனை செய்திகளும் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றன. இதை பார்த்து சேத்திக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. உடனே அது சம்பந்தமாக ஒரு டுவீட்டையும் பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் அந்த டுவீட்டுக்கு "தீ"  எமோஜி போட்டுள்ளார். எலோன் மஸ்கின் அந்த ட்வீட்டை 10 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 
    உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டாளர்களை அதிகம் கொண்ட பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் ஆகியவை நேற்றிரவு சிறிது நேரம் முடங்கியது. #Facebook #Instragram #SlowDown
    புதுடெல்லி:

    உலகின் பரவலான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக், உலகின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு திடீரென சிறிது நேரம் செயல்பாட்டினை இழந்தது. இது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய ஒன்றாகும்.

    பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்கள் கணக்குகளில் நுழைய முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகினர். பின்னர் சிறிது நேரம் கழித்து, ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பேஸ்புக் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். உங்களது காத்திருப்பிற்கு நன்றி’ எனும் குறுஞ்செய்தி அனைவருக்கும் கிடைத்துள்ளது.



    இதேபோல் புகைப்படங்களை பகிரும் தளமான இன்ஸ்ட்ராகிராமும் செயல்படவில்லை. லண்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளின் மக்கள்  அதிக அளவில் பேஸ்புக்கினை பயன்படுத்துகின்றனர். இதுவரை பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

    இதன் பின்னர் , பேஸ்புக் கணக்கின் உள்ளே சென்று, புதிய பதிவுகள் ஏதும் செயல்படாமல் பழைய பதிவுகளே தொடந்து பார்வைப்படுத்தப்பட்டதாக சிலர் கூறியுள்ளனர்.

    தொழில்நுட்ப உலகில் 24 மணி நேரத்தில் நடந்த இரண்டாவது வலைத்தள முடக்கம் இதுவாகும். முன்னதாக இன்று அதிகாலை கூகுள் நிறுவனத்தின் கூகுள் டிரைவ், ஹங் அவுட் போன்ற தளங்கள் சிறிது நேரம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Facebook #Instragram #SlowDown
    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ பக்கத்தில் இருந்து தகவல் திருடப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, கலாமின் சகோதரர் கடிதம் எழுதியுள்ளார். #AbdulKalam
    புதுடெல்லி:

    ‘மக்களின் ஜனாதிபதி’ என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி மரணமடைந்தார். நேற்று அவரது 3-ம் ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

    சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மிகுந்த அன்பு வைத்திருந்த கலாம், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். இதற்காக @apjabdulkalam என்ற டுவிட்டர் கணக்கையும், பேஸ்புக் பக்கம் ஒன்றையும் பயன்படுத்தி வந்தார். இவற்றின் மூலம் அவரை லட்சக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர்.

    அப்துல் கலாம் மறைவுக்குப்பின் அவரது ‘டுவிட்டர்’ கணக்கு மாற்றப்பட்டு இருப்பதுடன், அதில் இருந்த பின்தொடர்பாளர்கள் அனைவரும் @kalamcenter என்ற டுவிட்டர் கணக்குக்கும் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கு, கலாமிடம் பகுதி நேர உதவியாளராக பணியாற்றி வந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பவருக்கு சொந்தமானதாகும்.

    மேலும் கலாம் பெயரில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அமைப்புகள் இயங்கி வருவதாகவும், இதில் ஒன்றை ‘கலாம் சென்டர்’ என்ற பெயரில் டெல்லியில் ஸ்ரீஜன்பால் சிங் நடத்தி வருவதாகவும் கலாம் குடும்பத்தின் சட்ட ஆலோசனைக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். இந்த அமைப்புகள் மூலம் சட்ட விரோதமாக நன்கொடைகள் வசூலிப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.


    கலாமின் மறைவை தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல், அவரது டுவிட்டர் கணக்கை மாற்றிய ஸ்ரீஜன்பால் சிங்கிடம் இது குறித்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் கலாமின் சொந்த டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கும் உரிமையை ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வெறும் 27 பின்தொடர்பாளர்களுடன் கலாமின் டுவிட்டர் கணக்கை அவர் ஒப்படைத்தார். தற்போது அதில் 1000 பின்தொடர்பாளர்களே உள்ளனர். மேலும் அந்த கணக்கில் கலாம் பதிவு செய்திருந்த சிந்தனைப்பதிவுகள் அனைத்தும் திருடப்பட்டு இருக்கிறது. இது கலாம் குடும்பத்தினருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரா மரைக்காயர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கலாமின் பொக்கிஷமாக கருதப்படும் அவரது டிஜிட்டல் சொத்துக்களை அவருடன் பணி செய்தவர்கள் உள்பட சிலர் தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக ராணுவம், உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

    முன்னாள் ஜனாதிபதி கலாமின் டுவிட்டர், பேஸ்புக் பக்கங்களில் தகவல் திருடப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #AbdulKalam
    பயனாளர்களின் விபரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளிக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் தகவல்களை வெளியிட்ட விவகாரத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்துள்ள பேஸ்புக், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பயனாளர்களில் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு பேஸ்புக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    ×