search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரூராட்சி"

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .
    • பதவி உயர்வு வழங்கவேண்டும்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டலத்தில் , பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் வகையில் பொது சுகாதார துறையில் மேற்கொள்வது போல், மண்டல பேரூராட்சி உதவி இயக்குனரின் மேற்பார்வையில் பணியாளர்கள் கோரிக்கை தினம் நடத்த வேண்டும் .

    நாகர்கோவில் மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 1996 - க்கு முன்னர் பணியமர்த்தப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு , பதவி உயர்வு வழங்கவேண்டும் . அரசு பணியாளர் சங்கம் சார்பாக கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்களை பெறுவதில் , மாவட்ட பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடினமான சூழ்நிலையை கண்டித்தும் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் இன்று தொடங்கியது . போராட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.

    மாநில பொதுச்செயலாளர் முத்து , மாநில பொருளாளர் சேகர் , மாநில அமைப்புச் செயலாளர் சதீஷ், துணைப்பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி , மாவட்ட செயலாளர் தனசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுபாஷ்சந்திரபோஸ் , இசக்கிமுத்து , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க நிர்வாகி நரேந்திரகுமார் , உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டது.

    இதற்கான பணியை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பேரூராட்சி கள், ஊராட்சிகள், மாநக ராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, கிள்ளியூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஐரேனிபுரம் கூட்டுறவு வங்கி முதல் பேராலி வரையில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி தலைவர்சீலா சத்தியராஜ், துணைத்தலை வர் சத்தியராஜ், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி நடந்தது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வார்டு 15 வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி மற்றும் தூய்மைப்பணி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் கலந்துகொண்டு பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கும் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்து விளக்கி பேசினார்.

    மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் இசக்கிமுத்து, பேரூராட்சி செயல்அலுவலர், அலுவலக பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் குத்தாலிங்கம், சுடலைஈசன், ஆறுமுகராஜா, மாயாண்டி, காமராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுகுளத்தூரில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
    • கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஏ.ஷாஜஹான் தலைமையில், நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலையில் நடந்தது. ராஜேஷ் வரவேற்றார்.

    மோகன்தாஸ் (7-வது வார்டு தி.மு.க.) பேசுகையில், சங்கராண்டி ஊரணி பகுதியில் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளதால் டூவீலர் கூட செல்லமுடியவில்லை. உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றார்.

    செயல் அலுவலர்: அந்த சாலையில் மக்கடம் அடிக்கப்படும்.

    மோகன்தாஸ்: முதுகுளத்தூர் நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சர்வேசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    சேகர் (10-வது வார்டு): தினசரி சந்தையை ஒழுங்குபடுத்த வேண்டும். கழிவறையில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும்.

    பால்சாமி (9-வது வார்டு): கழிவுநீர் பல இடங்களில் தேங்கி கிடக்கிறது. சேர்மன்: கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது.

    உடுமலை:

    விவசாய தொழிலாளர்கள் சங்கம் மடத்துக்குளம் தாலுகா மாநாடு கணியூரில் நடந்தது. இதில் கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காததைக்கண்டித்து, தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது.

    மடத்துக்குளம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவசர முதல் உதவி சிகிச்சை, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    கணியூர், சங்கராமநல்லூர், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவும், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் வேலைத்திட்டத்தில் வேலை கேட்பவர்களை அலைக்கழிக்காமல், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
    • இந்த தொட்டியின் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பத்தறை காலனியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த சில வருடங் களுக்கு முன்பு தொட்டி பழுதடைந்தது.

    இதையடுத்து இந்த தொட்டியில் நீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு பதில் அருகில் வேறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

    இந்த தொட்டியின் மைதா னத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.இதனால் ஆபத்தான இந்த தொட்டியை இடித்து அகற்ற முன்னாள் கவுன்சிலர் ரவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆபத்தான குடிநீர் தொட்டியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.
    • இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.

    இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.

    இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

    • திருப்பத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
    • நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி கூட்டம் சேர்மன் கோகிலாராணி நாராயணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை சேர்மன் கான் முஹம்மது முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் தமது பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    வர இருக்கும் பருவமழைையயொட்டி நகர் பகுதி மட்டுமில்லாமல் ஏனைய பிற பகுதிகளிலும் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல் மற்றும் அதனை தடுக்கும் வகையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அது சம்பந்தமாக ஒலிபெருக்கி மூலமும், சுகாதார பணியாளர்கள் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் சரிவர பயன்பாடு இல்லாமல் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்த சேர்மன், கடந்த கால நிர்வாகத்தை காட்டிலும் தற்சமயம் நான் பொறுப்பேற்றவுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான தெரு விளக்கு மேம்படுத்துதல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர் பகுதிகளிலும் மின்விளக்குகளை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உள்ளேன். வரும் காலங்களில் அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • விஜய்வசந்த் எம்.பி தொடங்கி வைத்தார்
    • குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

    கன்னியாகுமரி:

    வேர்கிளம்பி பேரூராட்சி அலுவலகம் அருகில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து மிக மோசமாக காணப்பட்டது. அதை மாற்றி புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. நிதியில் இருந்து ரூ. 11 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து அதற்கான கட்டுமான பணியினை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரைராஜ் மனுவேல் முன்னிலை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஏசுராஜா, காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், துணைத் தலைவர் ஜெபதாஸ், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜோண், வட்டார துணைத் தலைவர் ஒஸ்டின் ஞான ஜெகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று குமரன்குடி ஊராட்சி புல்லாணி பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் எம்.பி நிதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான பணிகளையும் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பேரூராட்சி பகுதியில் சேகரிக்கும் குப்பைகள் சிவகிரி சந்தைமேடு பகுதியில் உள்ள சந்தையின் உள்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உரப்பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குப்பை மேட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது.

    பின்னர் நேரம் செல்ல, செல்ல இரவு 9 மணியளவில் குப்பை மேட்டில் தீ பிடித்து தீ மளமளவென எரிய தொடங்கியது.

    இதைப்பார்த்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    தீ விபத்து நடந்த குப்பை மேட்டு பகுதிக்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணை தலைவர் கோபால், ெசயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் விசுவநாதன், கவுன்சிலர்கள் தனபால், மருதாச்சலம், மற்றும் வரதராஜ், பாபு ராஜா, செந்தில், கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    தீ பிடித்து எரிந்த குப்பை மேட்டில் விடிய விடிய தூய்மை பணியாளர்கள் கண்காணித்தனர். அப்போது தொடர்ந்து காலையிலும் குப்பையில் இருந்து புகை வெளியேறி கொண்டு இருந்தது.

    இதையடுத்து மீண்டும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகை மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் பொக்லின் எந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு புகையை அணைக்கும் பணி நடந்தது.

    குப்பை மேட்டில் தீ பிடித்து எரிந்ததால் அங்கு இருந்த பாட்டில்கள் வெடித்து சிதறியது. மேலும் கடுமையான புகை மண்டலம் நிலவியது.

    • அங்காளம்மன் கோவில் முன்புறம் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது.
    • துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் கடந்த 6-ந் தேதி ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் குடி அமர்த்தியுள்ளார்.

    இந்தநிலையில் குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

    ×