search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழப்பாவூர்"

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
    • கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    முதல் கட்ட பணிகள்

    இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி முதற்கட்ட பணிகளாக கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கோவிலுக்கு கடைசியாக 2003-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடை பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    • சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம்.

    தென்காசி:

    நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் அறிவுறுத்துதலின்படி கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கீழப்பாவூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது நிகர சொத்துவரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை பேரூராட்சியில் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி நடந்தது.

    தென்காசி:

    கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வார்டு 15 வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி மற்றும் தூய்மைப்பணி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் கலந்துகொண்டு பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கும் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்து விளக்கி பேசினார்.

    மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் இசக்கிமுத்து, பேரூராட்சி செயல்அலுவலர், அலுவலக பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் குத்தாலிங்கம், சுடலைஈசன், ஆறுமுகராஜா, மாயாண்டி, காமராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.
    • பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பத்மநாபபேரி குளத்தின் கரைகளில் ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.

    இந்நிலையில் ஆவுடையானூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பத்மநாபபேரி குளக்கரையில் சாலை அமைக்க அனுமதி கோரி இருந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் தற்பொழுது அதே பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குளக்கரையில் நடப்பட்டிருந்த ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் துளிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதற்கான செலவினங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கையால் விைரயம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது சாலை அமைத்து வரும் குளக்கரையில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் வாங்கி கொடுக்கப்பட்ட வளையல்களால் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு மாலையாக அணிவித்தனர். அம்மனுக்கு அணியப் பட்டிருந்த வளையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. அம்பாளுக்கு சாத்திய வளையல்கள் பெற்று செல்பவர்கள் வீடுகளில் அனைத்து மங்கள காரியங்களும் நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆடிப்பூர விழாவில் கிழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் திறந்து வைத்தார்.
    • திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் கல்வெட்டுகளை நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சியில் தலைவர் அறை புதுப்பித்தல், இளநிலை பொறியாளருக்கு தனிஅறை கட்டுமான பணிகள் முடிவுற்றன.

    திட்டப்பணிகள்

    மேலும் 6-வது வார்டில் மைதானம் அருகே அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு செய்து வர்ணம் பூசப்பட்டது. காமராஜர் பூங்கா அருகில் உள்ள கிளை நூலக கட்டிடம் பராமரித்தல், கூடுதல் கட்டிடம் கட்டுதல் உட்பட வேலைகளுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த 3 திட்டப் பணிகளும் நிறைவு பெற்றன.

    இந்நிலையில் நிறைவு பெற்ற பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன் நேற்று திறந்து வைத்தார்.

    முன்னதாக இந்த 3 பணிகளிலும் அரசு விதிமுறைப்படி கல்வெட்டுகள் அமைக்கப்படாமல் உள்ளதை முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன், கலெக்டர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனரகத்திற்கு புகார் அளித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து திறப்பு விழாவிற்கு முன்னதாகவே அந்த கல்வெட்டுகள் பேப்பர்களால் மூடப்பட்டிருந்தன.

    கல்வெட்டுகள்

    திறப்பு விழா முடிந்த பிறகு அங்கு வந்த நெல்லை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் இந்த 3 கல்வெட்டுகளையும் நேரில் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து 3 கல்வெட்டுகளையும் பேரூராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட தகவலில் அரசு விதிமுறைகளின்படி எம்.எல்.ஏ. வின் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது மரபு.

    ஆனால் அதனை செய்யாததால் கல்வெட்டுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதிய கல்வெட்டில் தொகுதி எம்.எல்.ஏ. வின் பெயரும் பொறிக்கப்பட்டு பின்பு முறைப்படி கல்வெட்டுகள் திறக்கப்படும் என தெரிவித்தனர். காலையில் திறப்பு விழா கண்ட கட்டிடத்தில் கல்வெட்டுகள் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    • காங்கிரஸ் சார்பாக அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்குடன் அமலாக்கத்துறை நடத்தி வருவதாகவும், அதனை கண்டித்தும், மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கீழப்பாவூர் சென்ட்ரல் பாங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமையில், கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி கவுன்சிலர்கள் இசக்கி ராஜ், கோடீஸ்வரன், வட்டார பொருளாளர் மாரிமுத்து, பாவூர்சத்திரம் நகர தலைவர் ஆனந்த், ராமராஜா, சிவசுப்ரமணியமுதலியார், சின்னராஜா, நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராமசாமி, மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் பொன்கணேசன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மதியழகன், வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஞானச்செல்வன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    நிகழ்ச்சியில் பாக்கியராஜ்,ஆசீர்வாதம், சுப்பையா, பரமசிவன், தொண்டன் ராஜேந்திரன், சௌந்தரபாண்டியன், பரமசிவன், ராமசாமி நாடார், கணேசன், காளி தேவர், மாரியப்பன், பழநி, பெரியசாமி, செல்வன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர், முடிவில் வட்டார செயலாளர் குமார் பாண்டியன் நன்றி கூறினார்.

    • கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குறும்பலாப்பேரி கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் முன்பு கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலக்கிறது.

    இதனால் அதன் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×