பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது.இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது.
பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மொடக்குறிச்சி அருகே உள்ள தூரபாளையத்தில் உள்ள காலி இடத்தில் கொட்டி உள்ளனர்.

இங்கு குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லேசான புகை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு புகை அதிகமாக பரவி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுவட்டார குடியிருப்புகளில் புகை மூட்டம் அதிகரித்தது.

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்சி அடித்து குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ, புகை மூட்டத்தை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி அணைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com