search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள்"

    • முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் ஏ.பி.டி.ரோடு, மங்கலம் ரோடு, முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 16 கடைகளில் ஆய்வு செய்ததில் அவற்றில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து மூடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் முதல் இதுவரை 234 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 70 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. முதல்முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-வது முறை குற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் 43 கடைகள் மூடப்பட்டன. புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

    • 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • மன்னார்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன.

    இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    • 13 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • இதுகுறித்து ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    தாம்பரம் மாநகர போலீஸ் கூடுவாஞ்சேரி சரகத்திற்கு உட்பட்ட ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீஸ் நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 13 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஒட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தர படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸார் பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துகடை ஊழியர் தட்டாஞ்சாவடி பிரகாசிடம் (25) விசாரணை நடத்தினர்.

    அவர்பண்ருட்டி, தட்டா ஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5000 கிலோ புகையிலை பொரு ட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
    • அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி புகையிலை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்"

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தங்கசிவம், சங்கரநாராயணன், குமாரபாண்டியன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கொட்டாரம் பகுதியில்உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த 3 கடைகளுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொட்டாரம் பெரியவிளை ரோட்டில் உள்ள ஒரு கடையில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்றதாக அந்த கடைக்கு அதிகாரிகள் "சீல்" வைத்தனர்.

    • புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த 2 மாதங்களாக நடத்திய சோதனையில் 384 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 2 மாதங்களாக புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் தடை செய்யப்பட்ட 384 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொடா்ச்சியாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் 94404-2322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.

    • போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
    • காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஜெகதீஷ் மற்றும் போலீஸ்காரர்கள் பிரபு, சதீஷ், குமரவேல் ,வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தர்மபுரி மாவட்டம் கரிமங்கலத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தர்மபுரியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருப்பூரில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • நன்னிலத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • நன்னிலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

     திருவாரூர்

    நன்னிலத்தில் பொது சுகாதார துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர், முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் அன்பழகன்,

    சுகாதார ஆய்வாளர்கள் ஹட்சன், மிதுன், கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
    • 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அன்பரசன், சந்திரன் வள்ளி மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அரசம்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளின் உரிமை யாளர்க ளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த சோதனை யில் மொத்தம் 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.
    • போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசு பாதம் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் பேரில் பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி, பள்ளிப்பட்டி, முத்தம்பட்டி, சுங்கர ஹள்ளி, வேப்பிலைப்பட்டி மற்றும் மலை கிராமங்கள் என 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு பொம்மிடியில் உள்ள பெரிய மளிகை கடைகள் சிலவற்றிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒட்டுமொத்த விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் பொம்மிடி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது பொம்மிடி ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள பாலசுப்பிரமணியன் மளிகை கடை அருகில் அதன் உரிமையாளர் விஸ்வநாதன் (வயது 45) இருசக்கர வாகனத்தில் வெள்ளை பையில் மூட்டையை வைத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருவதை கண்டனர்.

    வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் மளிகை கடை உரிமையாளர் விஸ்வநாதனை போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த கொள்முதல் மளிகை உரிமையாளர் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    பொம்மிடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒட்டுமொத்த கடைகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • ரூ.1500 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மலையன் தெருவில் ராஜேந்திர பிரசாத் நடத்திவரும் கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1500 மதிப்பிலான அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    ×