search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை போலீசார்"

    • கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருளரசு (வயது 48). இவருக்கும் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2014 -ம் ஆண்டு கணேஷ், அருளரசை வெட்டி கொலை செய்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். பின்னர் கணேஷ் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளியில் வந்த கணேஷ் அதன் பிறகு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான கணேஷை தேடி வந்தனர். கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருவதாக நீதிமன்றத்தில் கணேஷ் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து தேவையின்றி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவு பெற்றனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து கணேஷை தேடி வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மீண்டும் அவர்களது உறவினரிடம் கேட்டபோது கணேஷ் இறந்துவிட்டதாக தகவலும் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    இதில் கணேஷ் உறவினர்கள் திருமண பத்திரிக்கையில் கணேஷ் பெயர் இடம் பெற்றது. ஆனால் அதில் இறந்தது போல் எந்த தகவலும் பதிவு செய்யவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து கணேஷ் உறவினர்களின் போன் நம்பரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதில் ஒரு நம்பருக்கு அடிக்கடி ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக குறிப்பிட்ட நம்பரை கண்காணிக்க தொடங்கினர். மேலும் அது யாருடைய நம்பர்? அவர் யார்? என்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்தது கணேஷ் என்பது உறுதியாக தெரிந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் ரகசியமாக கடந்த6 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றிருந்ததும், அதன் மூலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததும் போலீசாருக்கு உறுதியாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேஷ் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொலை வழக்கு கைதியான கணேஷை போலீசார் பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த, மனோஜ்குமார் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

    இது குறித்து உமாரபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் சமீப நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வடசேரி, கோட்டார், நேசமணிநகர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் கடைவீதிகளில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க திருடப்படும் மோட்டார் சைக்கிள் ரோட்டோரங்களில் மீட்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. போக்குவரத்து பிரிவு போலீசார் நாகர்கோவில் நகரில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஒழுகினசேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரோட்டோரத்தில் அனாதையாக நின்றது. இதை மீட்ட போலீசார் அந்த வண்டிக்கு அபராதத்தை விதித்தனார். இதுதொடர்பாக விசாரித்தபோது மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 2-ந்தேதி வடசேரி பகுதியில் நிறுத்தியிருந்தபோது திருடி சென்று விட்டதாகவும் இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார்.

    இதையடுத்து போலீசார் அந்த உரிமையாளரை வரவழைத்து அந்த வாகனத்தை ஒப்படைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் வேப்பமூடு, கோட்டார் பகுதிகளில் இதேபோல் போக்குவரத்து போலீசார் திருடிய மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விட்டு சென்றதை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் திருடிய மோட்டார் சைக்கிளை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்வதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்று நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மோட்டார் சைக்கிள்களை சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்திவிட்டு அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
    • 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டிபகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தர படி பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸார் பண்ருட்டி -கும்பகோணம் சாலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில்அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துகடை ஊழியர் தட்டாஞ்சாவடி பிரகாசிடம் (25) விசாரணை நடத்தினர்.

    அவர்பண்ருட்டி, தட்டா ஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து கடையில் இருந்த பாக்கெட் புகையிலை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 5000 கிலோ புகையிலை பொரு ட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே ஹரி பத்மன் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
    • ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கவின்கலை கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர் மற்றும் நடன உதவியாளர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் முன்னாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019-ம் ஆண்டு பாலியல் சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன்பேரில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் பேராசிரியர் உடனடியாக கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அதன்பின்னரே கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்' என்றும் தெரிவித்தனர்.

    கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த 5 முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    நேற்று மாலையில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற தனிப்படை போலீசார் கேரள மாணவிகள் 5 பேரிடமும் இன்று விசாரணை நடத்தினர். அப்போது கலாஷேத்ராவில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக மாணவிகள் பரபரப்பான தகவல்களை தெரிவித்து உள்ளனர்.

    இதனை சென்னை தனிப்படை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். கேரள மாணவிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பேராசிரியர் ஹரி பத்மன் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் விரைவில் சென்னை திரும்பும் போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கலாஷேத்ரா விவகாரத்தில் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள்.

    இதற்கிடையே பேராரியர் ஹரிபத்மன் ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை தொடர்ந்து நேற்று மாலையிலேயே அவர் விசாரணைக்காக போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பேராசிரியர் ஹரி பத்மன் இன்று காலை வரையில் சென்னைக்கு வரவில்லை. ஐதராபாத்திலேயே அவர் தலைமறைவாக இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ஹரி பத்மனின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டறியவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து பேராசிரியர் ஹரி பத்மன் மீதான பிடி இறுகி உள்ளது.

    இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

    • அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
    • தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரம், செங்கல்பட்டு தாலுக்கா, பாலூர், திருப்போரூர், கேளம்பாக்கம், மானாமதி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சட்ராஸ், செய்யூர், சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், படாளம் மற்றும் சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அதன்படி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சிவகாசி

    சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    மதுரை:

    மதுரை மாநகரில் புகையிலை மற்றும் குட்கா புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மதுரை தெற்குவாசல் தெற்கு வெளிவீதி பாண்டிய விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 35 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அந்த வீட்டில் இருந்த விக்னேஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து தெற்குவாசலில் வீட்டை வாடகை எடுத்து அதை குடோனாக மாற்றியுள்ளார்.வட மாநிலங்களில் இருந்து புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை வாங்கி, வீட்டுக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்று கைதான விக்னேசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
    • இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே செங்கோடகவுண்டன் புதூர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார்(வயது18) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    போலீசாரின் விசாரணையில் அவருடன் தங்கி இருந்த சங்கர் மாஞ்சி, உதான் சவுத்ரி மற்றும் பிண்டு மாஞ்சி ஆகிய 3 பேர் அவரை தலையில் கல்லை போட்டு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சங்கர் மாஞ்சி என்பவர் கைது செய்தனர். தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற 2 பேரும் தப்பியோடி விட்டனர்.

    தலைமறைவான 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பீகாருக்கு சென்று கயா, நாளந்தா உள்ளிட்ட மாவட்டத்தில் ேதடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளான உதான் சவுத்ரி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் காவலர் ரமேஷ் தலைமையிலான தனிப்படையினர் ெரயில் மூலம் பீகார் சென்றுள்ளனர்.

    • முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவினாசி கவுண்டர் பாளையம் பகுதியை சேர்ந்த வர் முத்துசாமி (வயது 68). விவசாயி. இவரது விவசாய நிலம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள இந்திரா நகரில் உள்ளது.

    வக்கீல் தோட்டம் என்று அழைக்கப்படும் அவரது தோட்டத்தில் பண்ணை வீடும் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் முத்து சாமி தங்கி விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 9-ந் தேதி பண்ணை வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் ரூ.27 லட்சம் வைத்து விட்டு பீரோவை பூட்டி வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி முத்துசாமி பண்ணை வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் சென்று விட்டார். அப்போது அவர் பீரோவை பூட்டாமல் சென்று விட்டதாக கூறப்படு கிறது.

    இதற்கிடையே நேற்று முன் தினம் பண்ணை வீட்டு தோட்டத்தில் வேலை செய்யும் தங்கராஜ் என்பவர் முத்துசாமிக்கு போன் செய்து வீட்டின் பின்புறம் உள்ள ஏணி சாய்ந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துசாமி உடனடியாக பவானிசாகர் பண்ணை வீட்டுக்கு வந்து பார்த்தார்.

    அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த ரூ.27 லட்சம் மாயமாகி இருந்ததும் தெரிய வந்தது.

    முத்துசாமி வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்டு யாரோ சிலர் வீட்டின் பின்புறத்தில் ஏணி வைத்து ஏறி குதித்து உள்ளே புகுந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துசாமி பவானிசாகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்து விசா ரணை நடத்தினர்.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கபட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாளவாடி போலீஸ் இன்ஸ் பெக்டர் செல்வம், கோபிசெட்டிபாளையம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தனி தனியாக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    • தேனி மாவட்டத்தில் அலைக்கற்றை முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.
    • அலைக்கற்றை முறைகேடு தனிப்படை போலீஸ் விசாரணை

    தேனி:

    தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு பேசக் கூடிய ஐ.எஸ்.டி. சேவை குறியீட்டுக்கான சிக்னல் அதிகரித்துள்ளது.

    நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் இது செல்லும் போது அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி ஐ.எஸ்.டி. பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரம், தேனி பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் பழைய பஸ்ஸ்டாண்டு உள்ளிட்ட 6 இடங்களில் இது போன்ற ஐ.எஸ்.டி. பயன்பாடு அதிகம் இருந்தது கண்டறியப்பட்டது.

    போலீசார் விசாரணை யில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் சஜீர் (வயது 41). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிப் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஒரு பெண்ணுடன் வந்து தங்களுக்கு வீடு வாடகைக்கு வழங்குமாறும் தனது கணவர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் வீட்டு உரிமையாளரிடம் தெரி வித்துள்ளனர்.

    அதன் பிறகு அந்த பெண் வீட்டுக்கு வருவதில்லை. சஜீர், முகமது ஆசிப் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் 31 நவீன தொழில் நுட்ப கருவிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    இவர்களிடம் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரி கள், கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி னர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உத்தமபாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட னர். அவர்களை வருகிற 22-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், செல்போன் அலைக்க ற்றையை திருடியவர்கள் இதன் மூலம் வெளிநாடு களுக்கு குறைந்த செலவில் பேசுவதற்கும், ரகசிய உரையாடல்கள் மேற்கொ ள்ள வும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய தொலைபேசி யில் பேசினால் 5 நிமிட த்துக்கு ஒரு முறை சிக்னல் வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டே இருக்கும்.

    இணையதள குற்றங்கள், சட்ட விரோத சதி திட்டம் தீட்டுதல், பங்யகரவாத செயல்கள் போன்றவற்றுக்கு இது போன்ற தொழில்நுட்ப ங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. கைதான 2 பேரும் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு சம்பளம் வழங்கி மூளையாக செயல்பட்ட நபர்கள் கேரளாவில் தங்கி இருப்ப தாக சந்தேகமடைந்துள்ள னர். இவர்கள் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் என்ன காரணத்துக்காக பேசியுள்ள னர் என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    எனவே அடுத்தகட்ட நகர்வாக கேரளாவுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு இதில் முக்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு ள்ளது. இதனிடையே வீடு வாடகைக்கு எடுத்தபோது மனைவியாக நடித்த பெண் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரு கின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

    ×