கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
Published on

சிவகாசி

சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com