search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Force"

    • கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சிவகாசி

    சிவகாசி சிந்துராஜபுரம் தேவி நகர் பகுதியில் பத்மநாபன் என்பவர் வீடு உள்பட 4 வீடுகளில் கொள்ளையர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது சிவகாசி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதில் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை உடனடி யாக பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சிவகாசி டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி, சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீ சார் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 2 மர்ம நபர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் உடற்தகுதியுடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகர ஊா்காவல் படையில் காலியாக உள்ள மண்டல தளபதி, துணை மண்டல தளபதி ஆகிய பதவிகளுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூா் மாநகர ஊா்காவல் படையில் மண்டல தளபதி, துணை மண்டல தளபதி ஆகிய காலிப் பதவிகளுக்கு சேவை செய்ய தன்னாா்வமாக உள்ள சேவை செய்ய தகுதியுள்ளோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதில் விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் உடற்தகுதியுடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய மனுதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் செப்டம்பா் 10ந் தேதிக்குள் திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கு வருகிற 23 மற்றும் 24-ந் தேதிகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 55 ஆண்கள், 8 பெண்கள் என 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (15-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், சீதக்காதி- சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும்.

    வருகிற 23,24-ந் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்காவல் படை வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள் 18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். விளையாட்டு வீரர், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    10-ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 21-ந் தேதி மாலை 5 மணிக்கு முன், மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஆதார் அட்டை, ரே‌ஷன் கார்டு. மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ (பாஸ்போர்ட் சைஸ்)மதிப்பெண் பட்டியல் அசல் சான்று தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். ஊர்க்காவல் படை வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு காவல்துறை மூலம் 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்திற்கு 5 நாள் மட்டும் பணி வழங்கப்படும். பணிபுரிந்த நாளுக்கு 560 வீதம் 5 நாட்களுக்கு மாதம் ரூ.2800 ஊதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    கும்பகோணம் அருகே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் என்ற ஜீம் ராமலிங்கம் (வயது 42). முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர். இவர் திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரீங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திருபுவனத்தில் உள்ள தனது கடையை பூட்டி விட்டு ராமலிங்கம் தனது மகனுடன் லோடு ஆட்டோவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவு 12.30 மணியளவில் திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் அவர்கள் சென்ற போது திடீரென அவரை 2 பேர் கும்பல் வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள், ராமலிங்கத்தை, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவரது மகன் தடுத்து கூச்சல் போட்டுள்ளார். இதனால் கும்பல் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இறந்தார்.

    இதற்கிடையே ராமலிங்கம் கொலையுண்ட தகவல் திருபுவனம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் திரண்டனர்.

    பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலையுண்ட சம்பவம் பற்றி திருவிடை மருதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமலிங்கத்தின் உடல் பிரேத பரிசோத னைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

    பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருபுவனம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், அரியலூர் மாவட்ட சூப்பி ரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எஸ்.பிக்கள் அன்பழகன், இளங்கோவன் தலைமையில் டி.எல்.பி.க்கள் கும்பகோணம் கமலக் கண்ணன், திருவிடைமருதூர் ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருவிடை மருதூர் மற்றும் திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ராமலிங்கத்தின் உறவினர்கள் இன்று காலை திருவிடை மருதூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அங்கு கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய வேண்டும் என்று ஆவேசத்துடன் போலீசாரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ராமலிங்கத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த முஸ்லீம் வாலிபர்கள் சிலருக்கும் நேற்று காலை மதம் மாற்றப்படுவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராமலிங்கம் அவர்களிடம் ஆவேசமாக பேசி தகராறு செய்ததாக தெரிகிறது.

    இந்த பிரச்சினை காரணமாக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும் ராமலிங்கம் மீது திருவிடைமருதூர் போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சில வழக்குகளும் உள்ளது. ரவுடி போல் திரிந்த ராமலிங்கத்தை வேறு யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட ராமலிங்கத்துக்கு சித்ரா என்ற மனைவியும், சாம்சந்தர், மலர் மன்னன், இளவரசன் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருபுவனம் பகுதியில் இன்று காலையில் கடைகள் அடைக்கப்பட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.

    முன்னாள் பா.ம.க. செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவிடைமருதூர், திரு புவனம் பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதையொட்டி குமரி மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    நாகர்கோவில்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இது போல் குமரி மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அதாவது மாவட்டம் முழுவதிலும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் அதிகப்படியான போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதிலும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிலும் முக்கியமாக ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் இந்த மெட்டல் டிடெக்டர் வழியாக தான் செல்ல வேண்டும்.

    மேலும் சந்தேகப்படும் படியாக யாரேனும் வந்தால் அவர்களில் உடமைகளை சோதனை செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வே பாலங்களையும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அதோடு மட்டும் அல்லாது கடல் வழி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்கு படகில் சென்று கண்காணித்து வருகிறார்கள். சர்வேதச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றார்கள்.
    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. #BabriMasjiddemolition
    கே.கே.நகர்:

    பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வியாழக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் கூடுதலாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். நடைமேடைகளில் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்தி உள்ளனர். ஓடும் ரெயிலிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.  #BabriMasjiddemolition
    ×