

திருப்பூர் :
திருப்பூா் மாநகர ஊா்காவல் படையில் காலியாக உள்ள மண்டல தளபதி, துணை மண்டல தளபதி ஆகிய பதவிகளுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூா் மாநகர ஊா்காவல் படையில் மண்டல தளபதி, துணை மண்டல தளபதி ஆகிய காலிப் பதவிகளுக்கு சேவை செய்ய தன்னாா்வமாக உள்ள சேவை செய்ய தகுதியுள்ளோா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்டவராகவும், பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் உடற்தகுதியுடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆகவே, மேற்கண்ட தகுதியுடைய மனுதாரா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் வரும் செப்டம்பா் 10ந் தேதிக்குள் திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.