என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 43 கடைகள் மூடல் - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை
- முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவுப்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் மத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் ஏ.பி.டி.ரோடு, மங்கலம் ரோடு, முருகம்பாளையம், கே.வி.ஆர்.நகர், செல்லம்நகர், ஆண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 16 கடைகளில் ஆய்வு செய்ததில் அவற்றில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து மூடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் முதல் இதுவரை 234 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, அதில் 70 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. முதல்முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், 2-வது முறை குற்றத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் 43 கடைகள் மூடப்பட்டன. புகையிலை பொருட்கள் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.






