search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fines for shops"

    • 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

    ஊட்டி,

    தமிழக அரசு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை கடந்த 2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளா்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேருராட்சியில் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரிகள், வணிக வளாகங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் சுகாதார அலுவலர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.5500 அபராதம் விதிக்கபட்டது.

    ×