search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர் கைது

    • தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.
    • போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசு பாதம் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் அந்தந்த காவல் நிலைய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் பேரில் பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி, பள்ளிப்பட்டி, முத்தம்பட்டி, சுங்கர ஹள்ளி, வேப்பிலைப்பட்டி மற்றும் மலை கிராமங்கள் என 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கு பொம்மிடியில் உள்ள பெரிய மளிகை கடைகள் சிலவற்றிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒட்டுமொத்த விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான போலீசார் பொம்மிடி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது பொம்மிடி ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள பாலசுப்பிரமணியன் மளிகை கடை அருகில் அதன் உரிமையாளர் விஸ்வநாதன் (வயது 45) இருசக்கர வாகனத்தில் வெள்ளை பையில் மூட்டையை வைத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வருவதை கண்டனர்.

    வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் 48 பாக்கெட்டுகள், பாக்கு 100 பாக்கெட்டுகள், பான் மசாலா 176 பாக்கெட்டுகள், கூல் பைப் 134 பாக்கெட் என மொத்தம் 546 பாக்கெட்டுகள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் மளிகை கடை உரிமையாளர் விஸ்வநாதனை போலீசார் கையும் காலுமாக பிடிபட்டவுடன் போலீசார் அவரை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஒட்டுமொத்த கொள்முதல் மளிகை உரிமையாளர் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    பொம்மிடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஒட்டுமொத்த கடைகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×