search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிப்பு"

    • ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் முனீசு வரன்(வயது21). இவருக்கும் பெருங்குளத்தை சேர்ந்த காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோ ருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் முனீசுவரன் ராமநாதபுரத்திற்கு சென்று தனது சித்தியிடம் ரூ.58 ஆயிரம் வாங்கினார். பின்னர் உறவினர் சதீசு வரனுடன் அங்கிருந்து சேர்வைக்காரன் ஊரணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர்கள் பெருங்குளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு முனீசு வரனும், சதீசுவரனும் அங்கிருந்து ஓடி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீசில் முனீசுவரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் செல்போன்-செயின் பறிக்கப்பட்டது.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருமால்புரம் வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (19). இவர் சம்பவத்தன்று மேலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் முகவரி கேட்பது போல் நடித்து லோகேஷ் குமாரின் செல்போனை பறித்து சென்றனர்.

    மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அவனியாபுரம் பகுதியில் ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர்- பெண்ணிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டது.
    • திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் சந்திராலயம் முதல் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). இவரது உறவினர் கணேசன். இவர் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர் .இதில் கணேசன் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போனையும் ரூ.600-யும் வாலிபர்கள் பறித்து தப்பினர்.

    இது குறித்து கணேசனின் உறவினர் சுரேஷ் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருப்பரங்குன்றம் படப்பட்டி தெருவை சேர்ந்த இளையராஜா (43), தனக்கன்குளம் கிழக்குபகுதி ஈஸ்வரன் (45) ஆகியோரை கைது செய்தனர்.

    மதுரை உலகநேரி மிருதுஞ்ஜெயன் மனைவி சித்ராதேவி (30). இவர் நேற்று மாலை அண்ணா பூங்காவில் நடை பயிற்சி சென்றார். அவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர் பின் தொடர்ந்தார்.

    பின்னர் அவர் சித்ரா தேவியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்டது.
    • 10 பவுன் தாலி செயினை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடராஜா காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கிரகலட்சுமி (வயது 49). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியின் பிள்ளைகளை அவரது வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் கிரகலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 10 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் கிரகலட்சுமி புகார் செய்தார்.

    அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாலிச் சேனை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
    • சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் அருகே உள்ள அ.குன்னத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    இதை பார்த்த அந்த அவர், பீர் பாட்டிலை உடைத்து அருகே வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி அருகில் இருந்த கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மூதாட்டி சரஸ்வதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகையை பறித்து சென்றது அ.குன்னத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், சுரேசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுரேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அலங்காநல்லூர் அருகே வாலிபரிடம் கத்தி முனையில் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை ஆரப்பாளையம் லட்சுமணபுரத்தை சேர்ந்த வர் ராமமூர்த்தி(வயது36). சம்பவத்தன்று இவர் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி பகுதியில் ஆட்டு பண்ணை வைத்து பராமரித்து வருகி றார். இவர் இரவு நேரத்தில் ஆட்டு பண்ணையில் தங்கி இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராமமூர்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், ஒரு செல்போனை யும் பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உள்ள கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி சரோஜா மற்றும் அவரது உறவினரான அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, காரைப்பாடியை சேர்ந்த புவனா ஆகியோர் பூமாலை வீட்டின் முன்பக்கத்தில் இரவில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கேட்டை திறந்து வரண்டா உள்ளே சென்று சரோஜா, தனலட்சுமி, புவனா ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.

    இதனால் திடுக்கிட்டு விழித்த 3 பேரும், சங்கிலியை மீட்பதற்காக போராடினர். அப்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர்.

    கோவை,

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் நாராயண பெருமாள்(வயது24). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.

    அந்த ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர். அவருடன் அதே ஓட்டலில் வேலை செய்து வரும் சாத்தான்குளம் பன்னம்பாறையை சேர்ந்த அஜித்குமார்(25) மற்றும் குன்னத்தூரை சேர்ந்த ஷாலின்(24) ஆகியோரும் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், நாராயண பெருமாளுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்து வந்தார். மேலும் அவர் தன்னுடன் அறையில் தங்கியவர்களின் பொருட்களை திருடியதாக தெரிகிறது.இதனையறிந்த ஓட்டல் நிர்வாகம் நாராயணபெருமாளை வேலையை விட்டு நீக்கியது. அவரை நீக்கியதால் அவரது நண்பர் அஜித்குமாரும் வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் அறையில் இருந்தனர்.

    கடந்த 6-ந் தேதி தனது அறையில் இருந்த ஷாலினிடம் இருவரும் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து மிரட்டி ஷாலினிடம் இருந்த 1 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் செல்போனை பறித்தனர். இருவருக்கும் பயந்து ஷாலின் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.

    இதனை அறிந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியர்கள் நாராயண பெருமாள் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

    இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.

    அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் சீலநாயக்கன்பட்டியில் திடீரென அங்கு வந்தபவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுப்பட்டார்.
    • அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டம், பனம ரத்துப்பட்டி அருந்ததியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). கொத்தனார். இவர் நேற்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் இரட்டைக் கோவில் அருகே நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மூர்த்தியை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கினார்.

    பின்னர் அவரிடமிருந்து ரூ.5000 பணத்தை பறித்துக் கொண்ட அவர், பிடிக்க வந்த அருகில் இருந்த நபர்களை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது, சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த நிர்மல் தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிராமத்தில் கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி விவசாயி வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.
    • பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கீரப்பட்டி மலை கிரா மத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 42). கடந்த 2022 டிசம்பர் 29-ந் தேதி இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர் ஒருவர், தான் ஒரு மந்திரவாதி என்றும், உங்கள் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அந்த பொருளை எடுக்காமல் விட்டால், உங்களது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுமெனவும், புதையலை எடுத்து கொடுப்பதற்கு, ரூ.1 லட்சம் செலவாகுமென கூறியுள்ளார்.

    இதனால் பதறிப்போன பழனியம்மாள் இந்த போலி மந்திரவாதியிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால், புதையலை எடுத்துக் கொடுக்கமால் அந்த மர்ம நபர் தலைமறைவானார்.

    இது குறித்து பழனி யம்மாள் வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியதில் புதையல் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் (41) என்பவர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து ேபாலீசார், அவரை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர்.

    • ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
    • திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    சேலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.

    இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார். 

    ×