search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பறிப்பு"

    • இளம்பெண்ணை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் செய்து பணம் பறிக்கப்பட்டது.
    • 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்எண்ணை கண்ணன் (வயது44). இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், அவரது மனைவி பிரேமா, உறவினர்கள் செல்வி, பாலா, காதர், அருள், மணி சங்கையா ஆகிய 7 பேரும் அந்த பெண்ணை கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 500-யை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்த 7 பேரையும் கைது செய்தனர்.

    • அடுத்தடுத்து 3 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நகரில் நகை பறிப்பு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் நகைகளை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் புஷ்பவள்ளி(வயது55). இவர் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புஷ்ப வள்ளி அரசு பஸ்சில் சென்றார். அங்குள்ள புளியமரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் மண்டபத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் புஷ்பவள்ளியை மறித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    மற்றொரு சம்பவம்

    நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சத்யா(33). இவரும் சம்பவத்தன்று திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    சன்னதி தெரு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா வைத்திருந்த பையை பறித்துக்கொண்டு தப்பினர். அதில், 2¾ பவுன் நகை இருந்தது. இந்த 2 நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை டி.ஆர்.ஓ. காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி தனபாண்டி (வயது37). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கணவருடன் வெளியே புறப்பட்டார். முத்தமிழ்நகர் 2வது தெருவில் சென்று கொண்டி ருந்தபோது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென மறித்து தனபாண்டி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மில் உரிமையாளரை தாக்கி ரூ.4 லட்சம் நகை-பணம் பறிக்கப்பட்டது.
    • வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள செவல்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது30). இவருக்கு சொந்தமான மில் கட்டிடம் கொத்தங்குளத்தில் உள்ளது.

    கடந்த சில வருடங்களாக மில் இயங்காமல் இருந்துள் ளது. இந்த நிலையில் உதயகுமாரும், அவரது நண்பர் சஞ்சய் பாபுவுடன் மில்லுக்கு சென்றார். அப்போது மில் வளாகத்தில் அமர்ந்து 7 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த உதயகுமாரும், சஞ்சய் பாபுவும் இங்கு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதுபோன்று இங்கு வந்து மது அருந்தக்கூடாது என்றும் கூறியுள்ளனர். அதைக்கேட்ட அந்த வாலிபர்கள் கோபமாக அங்கிருந்து சென்று விட்டனர்.

    பின்னர் இருவரும் சேர்ந்து அங்கு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் 2 இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அதில் ஒரு வாலிபர் மட்டும் பெரிய வாளுடன் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உதயகுமாரை நோக்கி வந்தார்.

    அவர் உதய குமாரையும், சஞ்சய் பாபுவையும் வாளை திருப்பி வைத்து தாக்கினார். மேலும் இருவரையும் மிரட்டி உதயகுமார் வைத்தி ருந்த வைர மோதிரம், 3½ பவுன் தங்க செயின், வெள்ளி பிரைஸ்லெட், 2 மொபைல்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவரிடம் இருந்து பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றார்.

    இது குறித்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
    • தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடு முறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்தி ருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட் டார் சைக்கிளில் மார்த் தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப் பட்டனர். மார்த்தாண் டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்ச லிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறு வனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்மமனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீ சாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
    • மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது மூதாட்டியை மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ரங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செயினை பிடித்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 2 ½ பவுன் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து மூதாட்டி பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

    • முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை சத்தியசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 29).இவர் சம்பவத்தன்று ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமணியை தாக்கி செல்போன்,ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

    எம்.கே.புரம் முத்துத்தேவர் தெருவை சேர்ந்தவர் பைசல் பாபா (28). இவர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு மின்வாரியம் அருகே நடந்து சென்றபோது, 17 வயதுடைய நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்றபோது ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த சுராஜ்குமார் (21) உள்பட 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

    • மொபட் ஓட்டிய பெண்ணிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர் மானகிரி 5-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (வயது37). இவர் மொபட்டில் அண்ணாநகர் செல்வ விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    அவர்கள் மகாலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

    நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

    இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நடந்து சென்ற‌ பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் .

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக ஜெகதீஷ் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெகதீ சிடம் செல்போன் பறித்தது நாழிக்கல்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.

    அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

    முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.

    பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டினாய் என கேட்டார்.
    • பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

    கோவை,

    கோவை கணபதி அருகே விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 43). இவர் ரேஸ்கோர்சில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று, இவர் கணபதி பாரதி நகரில் உள்ள வார சந்தையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர், எதிர்பாரபத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 45 வயது பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை கண்ட மகேஷ்வரன், ஆட்டோ டிரைவரிடம், ஏன் ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்தாய் என கேட்டார். இதில் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்டோ டிரைவர், 4 பேர் கும்பலுடன் அங்கு சென்றார். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த மகேஷ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை ஆட்டோவில் கடத்தி சென்று மணியகாரம்பாளையம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே கணபதிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர்.

    பின்னர் அவர் பையில் வைத்திருந்த ரூ.11,300 பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதயைடுத்து மகேஷ்வரன் நண்பரின் உதவியுடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    ×