search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு
    X

    வாலிபரிடம் பணம்-செல்போன் பறிப்பு

    • நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.

    அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

    முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.

    பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×