பெண்ணிடம் நகை பறிப்பு

விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது55). இவர் அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார் சம்பவத்தன்று வெளியூர் செல்வதற்காக தோட்டத்தில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து வந்தார். அப்போது மெயின் ரோட்டில் ஒரு காரின் அருகே 2 மர்ம நபர்கள் நின்றிருந்தனர்.

நாகம்மாள் அருகே வந்தபோது ஒரு மர்ம நபர் திடீரென்று நாகம்மாளின் வாயை பொத்தி அவர் கழுத்தில் அணிந்து இருந்த கவரிங் செயினை பதித்துள்ளார். மற்றொருவர் காதில் அணிந்திருந்த கம்மலை அறுத்து எடுத்துள்ளார். நாகம்மாள் சுதாரிப்பதற்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயமடைந்த நாகம்மாள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com