முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிப்பு

முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர்.
முதியவர் உள்பட 3 பேரிடம் பணம்-செல்போன் பறிப்பு
Published on

மதுரை

மதுரை சத்தியசாய் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சின்னமணி (வயது 29).இவர் சம்பவத்தன்று ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சின்னமணியை தாக்கி செல்போன்,ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

எம்.கே.புரம் முத்துத்தேவர் தெருவை சேர்ந்தவர் பைசல் பாபா (28). இவர் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு மின்வாரியம் அருகே நடந்து சென்றபோது, 17 வயதுடைய நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றான். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர்.

எஸ்.எஸ்.காலனி காளிமுத்து நேதாஜி தெருவை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் பை-பாஸ் ரோட்டில் நடந்து சென்றபோது ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த சுராஜ்குமார் (21) உள்பட 2 பேர் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுராஜ்குமாரை கைது செய்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com