search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள்"

    • சிவகாசியில் மாநகராட்சி புதிய கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
    • துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் சிவகாசி மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமையில் அமைச் சர்கள் நேரு, சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது அமைச்சர் கள் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்க ளுக்கு எளிதிலும், விரை வாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முதல்-அமைச்சர் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவி களை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரம மின்றி பணிபுரிய வசதியாக வும் பல்வேறு நிதித்திட்டங் களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதி களுடன் கூடிய அரசு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த புதிய கட்டிட பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் அரசு நிர்ண யம் செய்யப்பட்டுள்ள காலக்கட்டத்திற்குள் விரைந்து முடித்து, பயன் பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆய்வின்போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் அசோகன், சீனிவாசன், தங்கபாண்டி யன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், சிவகாசி மாநக ராட்சி துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் விவேகன் ராஜ், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கலுங்கு பகுதியில் உள்ள தண்ணீர் வந்து மறுகால் பாயும் தரைப்பாலத்தை உயர் பாலமாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக இருஞ்சிறை விலக்கு-கட்டனூர் சாலை யில் அமைந்துள்ள மறையூர் கலுங்கு பகுதியில் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    மேலும் இந்த பாலம் கட்டும் பணிகளால் இருஞ் சிறை வழியாக மதுரை, கமுதி, நரிக்குடி மற்றும் மானாமதுரை உட்பட பல் வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் வாகனங்க ளில் சென்று வருவதால் போக்கு வரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையும் ஏற்படுத் தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பருவ மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது போடப் பட்டுள்ள மாற்றுப் பாதை யானது மழையால் சேதம டைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கேட் டுக்கண்டுள்ளனர்.

    இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சுழி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறுகையில், இன்னும் ஓரிரு மாதத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து, விரைவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • கட்டுமான பணிகளை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் சிகிச்சைகள் குறித்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்ப ட்டு முதல் பிரசவமாக மேலவாஞ்சூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மனைவி ரோஷி (வயது 27) என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தையை பார்வையிட்டு அவருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு பெட்டகத்தை வழங்கினார்.மேலும் அந்த குழந்தைக்கு தருண் என்ற பெயர் சூட்டினார்.

    பின்னர் அதைத் தொடர்ந்து திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளத்திடலில் இடிக்க ப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டுமான பணி களை தொடங்கப்படாமல் இருப்பதை பார்வையிட்டு உடன் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷாசி த்திக்கா,வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் ,பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் முகமது சுல்தான்,பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ்,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
    • முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது.

    கோவை,

    தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாநகராட்சி பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.

    பின்னர் கோவை மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட சர வணம்பட்டி பூந்தோட்டம் நகரில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி, கோவை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி, 69-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை கிருஷ்ணசாமி சாலை மேற்புறத்தில் மழை நீர் வடிகாலுடன் கூடிய ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கட்டுதல் பணியை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று 72- வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கடம் சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 1.47 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுதல், என்.யு.எச்.எம் நிதியின் கீழ் வ.உ.சி பூங்கா மைதானம் அருகில் உள்ள சாலையில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு உள்ள தெரு ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, 54 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, அவிநாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை ரூ. 4.69 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் உள்ளிட்ட ரூ.13.01 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டார்.
    • நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையத்தை ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போத பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 22,23 ஆகிய 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.

    ஆய்வின் போது உடன் முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன் ,சரவணன், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன்ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொருட்களை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
    • கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன்.

    கும்பகோணம்:

    சமூக கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து கிராம சமுதாய மக்கள் விழிப்பு ணர்வு பெற்று வளர்ச்சி பெற இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 108இடங்களை

    தேர்வு செய்து அதில் கும்பகோணம் சுற்றியுள்ள சூரியனார் கோவில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நவக்கிரக கோயில்களில்

    தூய்மை பிரச்சாரம், உறுதிமொழி பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் உலக சுற்றுலா தினத்தில் நடைப்பெற்றது.

    தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதினம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ராமலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.பி. பாரதிமோ கன், ஒன்றிய குழு துணைத்த லைவர் கோ.க.அண்ணா துரை, தெற்கு மண்டல சுற்றுலா துறை அதிகாரி மாரிமுத்து, டாபி மாநில தலைவர் ஜாஹிர் உசேன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து முன்னதாக எனது குடும்பம், எனது ஊர், எனது கிராமம் மற்றும் எனது பணியிடத்து டன் தூய்மைக்கான தேடலை தொடங்குவேன் எனவும், உலக நாடுகள் தூய்மையா னவை என்றும் அவர்களின் குடிமக்கள் குப்பை கொட்டு வதில் ஈடுபடுவதில்லை எனவும், இந்த உறுதியான நம்பிக்கையுடன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன் எனவும் 100 மணிநேரத்தை தூய்மைக்காக செலவிட முயற்சி செய்வது என்றும்,

    தூய்மையை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும் எனது நாட்டை தூய்மையாக மாற்ற உதவும் என்றும்சுத்த மான தேசமே ஆரோக்கியமான தேசம் என மாணவர்கள் தூய்மை உறுதிமொழியை எடுத்தனர்.

    மேலும் பள்ளி மாணவ ர்கள் கை உறை அணிந்து கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொரு ட்களை அகற்றி தூய்மை பணிகளை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி மகாலிங்கம், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதின், பள்ளி தாளா ர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி பிரதிநிதிக ள்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
    • கூட்டுறவு சங்க வங்கிகளில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் தமிழ்நங்கை விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு சங்கத்தில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    எனவே, உரிய காலத்திற்குள் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினராக உள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் அளிக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். மேற்படி அ-வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும்போது எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலில் தங்களால் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும்.

    எனவே, மேற்கண்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்க வங்கி களில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில்உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூய்மை பணிகள்

    திருவெறும்பூர்.

    உலக சுற்றுலா தினமான இன்று, திருச்சி சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களை கல்லூரி மாணவர்கள் கொண்டு தூய்மை பணியானது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களை கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தலங்களை தூய்மைப்படுத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலமாக இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா தலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் நந்தவனம் மற்றும் குளம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இதில் தலையீடு செய்ய முடியவில்லை. எல்லாவற்றிற்கும் தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு உள்ள நந்தவனம் மற்றும் குளத்தினை பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை டெங்கு பரவல் இல்லை இதுவரை 37 நபர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு டெங்கு பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் 73 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் தாலுகா ஆபீசில் உள்ள இ சேவை மூலமாக தங்களது தகுதியை தெரிந்து கொள்ளலாம். இதில் திருப்தி இல்லை என்றால் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். அதன்படி பரிசீலனை செய்து விசாரணைக்கு பிறகு தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் தொகை வழங்கப்படும் என்றார்.

    • ஜெயங்கொண்டம் பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி
    • சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53.95 லட்சம் மதிப்பீட்டில் தேவாமங்கலம் காந்திநகர் சாலை அமைக்கும் பணி, தழுதாழைமேடு ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.05 லட்சம் மதிப்பீட்டில் தழுதாழைமேடு ஆதிதிராவிடர் தெரு முதல் வாணதிரையன்குப்பம் வரையில் சாலை அமைக்கும் பணி,

    பிள்ளைப்பாளையம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.70.73 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளைப்பாளையம் முதல் கொல்லாபுரம் நியாய விலை கடை வரையில் சாலை அமைக்கும் பணி, இடைக்கட்டு ஊராட்சியில் ரூ.225.00 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி- சிதம்பரம் சாலையிருந்து இடைக்கட்டு செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

    உடன் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ ,கட்சி சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள், கோட்டாட்சியர் பரிமளம் வட்டாட்சியர் துரை, கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.
    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 13-வது வார்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சிறுபாலம் மற்றும் கழிவுநீர் கால்வாய் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர்.

    இதனிடையே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று அதனை உடனடியாக சீரமைத்து சரிசெய்திட நகராட்சி மற்றும் நெடுஞ்சா லைத்துறை யினருக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து பழைய பஸ் நிலையம் மடவிளாகம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தி கான்கிரீட் மூடியமைத்திட ரூ.4லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    பொக்லைன் எந்திரம் கொண்டு பள்ளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியினை நகர்மன்ற உறுப்பினர் முபாரக் பார்வையிட்டார்.

    ஒப்பந்த தாரர் பிரவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

    எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×