search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில்  சாலை பணி
    X

    முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி

    • ஜெயங்கொண்டம் பகுதிகளில் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி
    • சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 கோடி மதிப்பில் சாலை பணி

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.53.95 லட்சம் மதிப்பீட்டில் தேவாமங்கலம் காந்திநகர் சாலை அமைக்கும் பணி, தழுதாழைமேடு ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34.05 லட்சம் மதிப்பீட்டில் தழுதாழைமேடு ஆதிதிராவிடர் தெரு முதல் வாணதிரையன்குப்பம் வரையில் சாலை அமைக்கும் பணி,

    பிள்ளைப்பாளையம் ஊராட்சியில், முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.70.73 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளைப்பாளையம் முதல் கொல்லாபுரம் நியாய விலை கடை வரையில் சாலை அமைக்கும் பணி, இடைக்கட்டு ஊராட்சியில் ரூ.225.00 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி- சிதம்பரம் சாலையிருந்து இடைக்கட்டு செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

    உடன் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ ,கட்சி சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள், கோட்டாட்சியர் பரிமளம் வட்டாட்சியர் துரை, கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×