search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Missions"

    • பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொருட்களை அகற்றி தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
    • கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன்.

    கும்பகோணம்:

    சமூக கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு குறித்து கிராம சமுதாய மக்கள் விழிப்பு ணர்வு பெற்று வளர்ச்சி பெற இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் 108இடங்களை

    தேர்வு செய்து அதில் கும்பகோணம் சுற்றியுள்ள சூரியனார் கோவில், கஞ்சனூர், திருநாகேஸ்வரம் நவக்கிரக கோயில்களில்

    தூய்மை பிரச்சாரம், உறுதிமொழி பிரச்சாரம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சி கள் உலக சுற்றுலா தினத்தில் நடைப்பெற்றது.

    தூய்மை பிரச்சாரத்தை சூரியனார்கோவில் ஆதினம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ராமலிங்கம் எம்.பி, முன்னாள் எம்.பி. பாரதிமோ கன், ஒன்றிய குழு துணைத்த லைவர் கோ.க.அண்ணா துரை, தெற்கு மண்டல சுற்றுலா துறை அதிகாரி மாரிமுத்து, டாபி மாநில தலைவர் ஜாஹிர் உசேன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து முன்னதாக எனது குடும்பம், எனது ஊர், எனது கிராமம் மற்றும் எனது பணியிடத்து டன் தூய்மைக்கான தேடலை தொடங்குவேன் எனவும், உலக நாடுகள் தூய்மையா னவை என்றும் அவர்களின் குடிமக்கள் குப்பை கொட்டு வதில் ஈடுபடுவதில்லை எனவும், இந்த உறுதியான நம்பிக்கையுடன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தூய்மை பணிகளை பரப்புவேன் எனவும் 100 மணிநேரத்தை தூய்மைக்காக செலவிட முயற்சி செய்வது என்றும்,

    தூய்மையை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும் எனது நாட்டை தூய்மையாக மாற்ற உதவும் என்றும்சுத்த மான தேசமே ஆரோக்கியமான தேசம் என மாணவர்கள் தூய்மை உறுதிமொழியை எடுத்தனர்.

    மேலும் பள்ளி மாணவ ர்கள் கை உறை அணிந்து கோவில் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் போன்ற பொரு ட்களை அகற்றி தூய்மை பணிகளை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகி மகாலிங்கம், அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரி இணை செயலாளர் சிராஜுதின், பள்ளி தாளா ர்கள், தலைமை ஆசிரி யர்கள், உள்ளாட்சி பிரதிநிதிக ள்,கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகள் தொடங்கி ஓரு ஆண்டு கடந்து இன்னும் முழுமையாக முடியவில்லை.
    • கட்டுமானம் என்ற பெயரில் எந்திரத்தை ஒரு மூலையில் போட்டு விட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ் பெருமாள் , முதன்மைச் செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செ ழியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறியிரு ப்பதாவது:-

    தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.

    இந்தக் கோயில் கடந்த 2004 ஆம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது.

    18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கட்டமாக மூலவர் கோபுரம் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களை பாலாலயம் செய்வதற்கான பாலாலய பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகின்றன.

    இருந்தாலும் பணிகள் தொடங்கி ஓர் ஆண்டு கடந்து இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.

    குறிப்பாக ஆடி ஆவணி மாதங்களில் மாரியம்மன் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடத்தப்படும்.

    தற்போது கும்பாபி ஷேகத்திற்காக பாலாலயம் செய்யப்பட்டதால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை.

    மேலும் இந்திய உணவு கழகம் சார்பில் தேங்காய் தண்ணீரை சுத்திகரித்து அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பதற்கு இயந்திரத்தை வழங்கியது.

    அந்த இயந்திரம் ஆனது முதன்முதலாக புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் தான் அமைக்கப்பட்டது என இந்தியா முழுவதும் பரப்புரை செய்யப்பட்டது.

    ஆனால் கட்டுமானம் என்ற பெயரில் இயந்திரத்தை ஒரு மூலையில் போட்டு விட்டார்கள்.

    எனவே விரைவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இயந்திரத்தை தொடர்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக முதலமைச்சர், இந்து சமய அறநிலைத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டது.
    • கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    குத்தாலம்:

    கோமல் ஊராட்சியில் ரூ.42.63 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலகம் கட்டும் பணியை மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சியில் ரூ.42 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு நிதியிலிருந்து ஊராட்சி செயலகம் கட்டிட திட்டமிடப்பட்டு, அதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஊராட்சி செயலக கட்டிட பூமி பூஜையை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், தி.மு.க ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் திவ்யா சரண்ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.
    • தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேரோடும் தஞ்சை மேலவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு வீதி ஆகிய 4 வீதிகளில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.

    தேரோடும் வீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் சித்திரை பெருவிழா தேரோட்டம் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது.

    இன்று தேரோடும் வீதிகளில் அலுவலர்கள், போலீசாருடன் நேரடியாக கள ஆய்வு நடத்தினோம்.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தேரோட்டத்தை காண பக்தர்கள், பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அந்தந்த துறை அலுவலர்க ளுக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தேரோட்டத்தை காண பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    தேரோடும் வீதி சாலைகளில் உள்ள சிறு சிறு பள்ளங்கள் மூடப்பட்டு சரி செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்படும்.

    மேலும் அரசு கூறியப்படி தேரோடும் நேரத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு ஏற்கனவே எடுத்து கூறி உள்ளோம்.

    அதாவது தேரோடும் பகுதியில் அன்றைய தினம் செய்ய வேண்டிய மின்தடை உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் முழுமையாக பின்பற்றபடும்.

    இது தவிர தேரோட்டம் இன்று தஞ்சைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது ஆணையர் சரவணக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி,

    இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
    • ரூ. 1.40 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற செவ்வாய் பரிகால ஸ்தலமான வைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதனிடையே வைத்தீஸ்வரன்கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வாகனங்களில் வருவதாலும், சீர்காழி-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கோயில் அமைந்துள்ளதாலும் பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துவருகிறது.

    இதனிடையே வைத்தீ ஸ்வரன் கோவிலில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.40கோடி செலவில் 300மீட்டர் தூரத்திற்கு இருவழிதடத்தினை பல வழிதடமாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை உதவிகோட்டபொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த பணிகள் நிறைவடைவதன் மூலம் சற்று போக்குவரத்து நெருக்கடி குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    • வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவிகள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தொடக்கவிழா நடைபெற்றது.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்று வரும், மாணவ-மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி புத்தூர் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் தங்கிபயிற்சிபெறும் திட்டம் தொடக்கவிழா ஊராட்சி மன்ற தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டி.ஜெயசீலன் மற்றும் மணிவண்ணன் சிறப்புறையாற்றினர். தொடர்ந்து மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், விவசாயிகள் சக்திவேல், பிரதாமசந்திரன், மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் அக்கிராமத்தில் தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்ள உள்ளனர்.

    ×