search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Work is busy"

    • ரூ.63 லட்சத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கலுங்கு பகுதியில் உள்ள தண்ணீர் வந்து மறுகால் பாயும் தரைப்பாலத்தை உயர் பாலமாக கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக இருஞ்சிறை விலக்கு-கட்டனூர் சாலை யில் அமைந்துள்ள மறையூர் கலுங்கு பகுதியில் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பீட்டில் தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக உயர்த்தி கட்டும் பணிகள் நடை பெற்று வருகிறது.

    மேலும் இந்த பாலம் கட்டும் பணிகளால் இருஞ் சிறை வழியாக மதுரை, கமுதி, நரிக்குடி மற்றும் மானாமதுரை உட்பட பல் வேறு பகுதிகளுக்கு பொது மக்கள் வாகனங்க ளில் சென்று வருவதால் போக்கு வரத்து தடைபடாமல் இருக்க பாலத்தின் அருகே மாற்றுப்பாதையும் ஏற்படுத் தப்பட்டு உள்ளது.இந்த நிலையில் மறையூர் கண்மாய் கிழக்கு கலுங்கு பகுதியில் பாலம் கட்டும் பணியானது சில நாட்க ளுக்கு முன்பு தொடங்கப் பட்டு தொடர்ந்து நடை பெற்று வருகிறது. பருவ மழைகாலம் தொடங்கவுள்ள நிலையில் தற்போது போடப் பட்டுள்ள மாற்றுப் பாதை யானது மழையால் சேதம டைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் பாலத்தை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கேட் டுக்கண்டுள்ளனர்.

    இந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணி குறித்து நெடுஞ்சாலைத்துறையின் திருச்சுழி உதவி கோட்ட பொறியாளர் கணேசன் கூறுகையில், இன்னும் ஓரிரு மாதத்தில் பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்து, விரைவில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

    • சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
    • சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம். இதுேபால் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி உடுமலை பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

    அகல் விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×