திருநாகேஸ்வரம் பகுதியில் நாளை மின்தடை

தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திருநாகேஸ்வரம் பகுதியில் நாளை மின்தடை
Published on

கும்பகோணம்:

திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இதனால் அந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com