search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"

    • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன.

    திருப்பூர்:

    ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் விண்கற்கள் தேடுதல் திட்டத்தில் பங்கேற்று அவற்றிற்கு பெயர் வைக்கும் வாய்ப்பும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால் இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அறிவியல் கல்வி நிறுவனமான ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் விண்கற்களை கண்டறிவதற்கான பயிற்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.

    சர்வதேச வானியல் தேடல் கூட்டமைப்பான ஐ.எஸ்.ஏ.சி., மற்றும் நாசா இணைந்து, ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ஸ் தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்படும் படங்களை இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும்.பிரத்யேக மென்பொருள் உதவியோடு, படங்களில் இருப்பவை விண்கற்களா என மாணவர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து, நகரும் பொருட்கள் இருப்பின் மீண்டும் வானியலாளர்களுக்கு அனுப்பப்படும்.

    பல நிலை பரிசோதனைகளுக்கு பின், மாணவர்கள் அனுப்பியவை விண்கற்கள் என அடையாளம் காணப்பட்டால் அதற்கு பெயர் வைக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

    இது குறித்து ஓபன் ஸ்பேஸ் பவுண்டேஷன் உதவி அறிவியலாளர் கிரித்திகா கூறியதாவது:-

    சூரிய குடும்பத்தில் உள்ள சிறுகோள்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. விண்கற்களை கண்டறிவதன் வாயிலாக அதன் மோதலால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, வானியல் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விண்கற்கள் தேடுதல் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு பின் திட்டத்தில் பங்கேற்பாளர்களாக சேர்க்கப்படுவர்.நவம்பர் மாதம் ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதால், ஆர்வமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் www.openspacefoundation.in என்ற இணையதளத்திலோ அல்லது 99522 09695 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
    • பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில்:

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.

    இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஜெயராமன் தலைமை வகித்தார். தேவராஜன் மருத்துவமனை டாக்டர் புவனேஸ்வரி முன்னிலை வகித்து தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்து பேசினார். பின்னர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தற்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் உதரம் நாகராஜ், லதா உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நிகழ்ச்சியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
    • 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங் கப்பட உள்ளது.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பேடறஅள்ளி மற்றும் எச்சனஅள்ளி பஞ்சாயத்தில் இலவசமாக தென்னங்கன்று வழங்கும் நிகழ்வினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    இதில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்கள் பிரிதி நிதிகள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். நடப்பு ஆண்டில் பேடர அள்ளி, எச்சனஅள்ளி, கோணங்கி அள்ளி, பூதன அள்ளி, மாதேமங்கலம், கம்மம்பட்டி ஆகிய 6 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து களில் மானிய விலையில் விவசாய இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளது.

    நிகழ்ச்சியில் தென்னங் கன்று ஒவ்வொரு பஞ்சாயத்துகளில் 300 குடும்பங் களுக்கு 2 கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் கடப்பாறை, மண்வெட்டி, அறுவாள், பாண்டல் மற்றும் களைக் கொத்தி ஆகியவற்றை உள்ள டக்கிய வேளாண் பண்ணை கருவிகள், கைதெளிப் பான்கள், வரப்பு பயிராக பயிர் வகை விதைகள் விவசா யிகளுக்கு 50% மானியத்தில் ஒவ்வொரு கிராம பஞ்சா யத்துகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

    கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் குறைந்த பட்சம் 8 பயனாளிகளை கொண்ட 10 ஏக்கர் நீர் ஆதாரமற்ற மானாவாரி தரிசுநில தொகுப்பு தேர்வு பணி செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்படும் தொகுப்பில் நீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைத்து அந்த தொகுப்பு பரப்பு முழுவதும் பழமரம் நடப்பட்டு, மானா வாரி தரிசாக இருந்த நிலம் மீண்டும் வேளாண் சாகுபடிக்கு கொண்டு வரு வதின் வாயிலாக சாகுபடி பரப்பினை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேற்கூறிய அரசு மானிய திட்டங்களில் விவசாயிகள் முன்பதிவு செய்து பயன் பெறுமாறு அறிவித்தினார்.

    • வெண்ணை நிரப்பிய, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பானையை குழந்தைகள் தடியால் அடித்து உடைத்தனர்
    • உடைந்த பானையில் இருந்த வெண்ணையை பூஜையில் ைவத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது

    கோவை,

    ஆனைமலை அருகே கோபால்சாமி கோவிலில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது 1500 அடி உயரத்தில் கோபால்சாமி கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீசத்ய பாமாருக்மணி சமேத ஸ்ரீ நந்தகோபால்சாமி மலைக்கோவில் அமைந்துள்ளது.

    300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுயம்புவாக சத்யபாமா ருக்மணி சமேத நந்தகோ பால்சாமி காட்சியளிக்கிறார். இக்கோவில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது.

    குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமண தடை நீங்க வேண்டியும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் கோகுலாஷ்டமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

    கோகுலாஷ்டமியை முன்னிட்டு, கோவில் பரம்பரை பூசாரி கிருஷ்ண மூர்த்தி ஏற்பாட்டில் நந்த கோபால்சாமிக்கு சங்காபிஷேகம், யாகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணர், ராதை வேடமிட்டு குழந்தைகள் பங்கேற்றனர்.

    இரண்டாம் நாளான நேற்று வெண்ணை நிரப்பப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பானையை குழந்தைகள் தடியால் அடித்து உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. பானை உடைக்கப்பட்ட பின்னர் வெண்ணையை பூஜையில் ைவத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். இக்கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பாலீத்தீன் பைகள் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லாமல் இருக்கவும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி காலை காப்பு கட்டுதலும், மாலை முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார்.
    • அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பில் ரோட்ராக்ட் கிளப் தொடக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் மருது பாண்டியர் கல்வி நிறுவ னங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார்.

    மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி யன் மற்றும் மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் சிறப்பு லிருந்தினர்களாக தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    மேலும், சிறப்பு விருந்தினராக தாமரை இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீபத்ரிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    அப்போது ரோட்டரி சங்கத்தின் பயன்பாடுகள் குறித்தும், மாணவர்களாகிய அடுத்த தலைமுறை இளைஞர்கள் எவ்வாறு சேவை பணியாற்ற வேண்டும் என எடுத்துரைத்தனர். மேலும், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் கருணா ரோட்டரி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்களின் பணிகள் குறித்தும் பேசினார்.

    முன்னதாக தஞ்சை ரோட்டரி கிளப் தலைவர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் ரோட்டரி கிளப் செயலாளர் தார்சியஸ் நன்றி கூறினார்.

    விழாவில் ஆசிப்அலி, விஜயகுமார், ரமேஷ்குமார், சங்காரம், கண்ணன், நரேஷ்குமார் ஆகிய ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மருது பாண்டியர் கல்லூரி ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் மற்றும் கல்லூரி மேலாளர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.
    • வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உண்டாகிறது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராணி தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் அருண் சிவப்பு கூன் வண்டு தாக்குதல் குறித்து பேசியதாவது,

    இந்த சிவப்பு கூன்வண்டு தாக்குதல் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை அதிக அளவில் தென்னையை தாக்குகின்றன. இயந்திரங்கள் மூலம் உலவும் மேற்கொள்ளும் பொழுது காயங்கள் ஏற்படுவதால் அதிக அளவில் குருத்துகளை தாக்குகின்றன.

    இவ்வாறு தாக்கப்பட்ட தென்னை மரத்தில் கருப்பு நிற சாறுகள் வடிகின்றது.

    இதனால் மரங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. இந்தப் பாதிப்பு வளர்ந்த மரங்களில் அதிகளவில் பாதிப்பு உள்ளாகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் மாதங்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆகும்.

    இதனை கட்டுப்படுத்துவதற்கு ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு என்ற அளவில் பயன்படுத்தலாம் என்றார்.

    மேலும் இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவும் கூறினார்.

    தரமான தென்னங்கன்றுகள் தேர்வு செய்து நடுவது குறித்தும், நீர் மேலாண்மையில் சொட்டுநீர் பாசன முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த உரம் வேளாண்மை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உதவி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள், பயிர் அறுவடை களப்பணியா ளர்கள் மற்றும் உழவர் நண்பர்கள், பண்ணை தகவல் ஆலோசனை குழுக்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பொன் செல்வி, நெடுஞ்செழியன், சத்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்பத னிருப்பு அல்லிவிளாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைப்பெற்றது.

    விழாவில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலனை கருதி சுகாதார கேடு இல்லாமல் அனைத்து மாணவர்களும் தண்ணீர் அருந்த வேண்டும் என்று நோக்கத்தோடு முன்னாள் மாணவ மாணவிகள் சார்பாக பள்ளிக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வாங்கி கொடுத்தனர்.

    விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ராஜீவ் காந்தி, பாலமுருகன், இளையராஜா, அருள், ராஜகுரு, வினோத், அமிர்தலிங்கம், உத்திராபதி, செல்வ சுந்தரி, கோமதி, விஜயலட்சுமி, சுமித்ரா, சுகுணா, மற்றும் சக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம் மாதேஹள்ளி மற்றும் ஓ.ஜிஹள்ளி ஆகிய ஊர்களில் பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ் மாவட்ட துணை தலைவர் சோபன் மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி குமார் மற்றும் தொழிற்பிரிவு கிருஷ்ணன், தருமபுரி வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் , நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தலைவர் மாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஓபிசி அணி செயலாளர் கல்யாண சுந்தரம், கூட்டுறவு பிரிவு செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஒன்றிய செயலாளர்கள் முருகன் ,சந்தோஷ், திருப்பதி, ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் டி.பி முருகன், மாவட்ட ஒன்றிய அணி மற்றும் அணிபிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராம கிருஷ்ணன் மற்றும் கிளை தலைவர்கள் மாதேஅள்ளி தினேஷ் குமார், சம்பத், மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
    • திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வர மகாலட்சுமிக்கு நாளை (25-ந்தேதி) வெள்ளி க்கிழமையன்று வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

    இதற்காக நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டு புண்யா ஹவாசனம் நடை பெறுகிறது. இதை த்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அம்மனுக்கு 8 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இதனையடுத்து 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.

    இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×