search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிகழ்ச்சி"

    • தக்கலையில் 27-ந்தேதி நடக்கிறது
    • தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- வருங்கால வைப்புநிதி நிறுவனம் சந்தாதாரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்களுக்கு வைப்புநிதி உங்கள் அருகில் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி அக்ேடாபர் மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தக்கலை கல்குளம் தாசில்தார் அலு வலகம் அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கத்தில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், பிராந்திய குழு உறுப்பினர்கள், தொழிற் சங்கங்களின் அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, பணியில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றிற்கான திருத்தம் தொடர்பாகவும் மனு கொடுக்கலாம்.

    தொழில் நிறுவனங்கள் சட்ட திட்ட விதிகள் தொடர்பான சந்தேகங்கள், யு.ஏ.என். ஒதுக்கீடு செய்தல், புதிய பணியாளர்களை சேர்ப்பது தொடர்பான உதவிகளை பெற இந்த நிகழ்ச்சியை பயன் படுத்தலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பங்கு தாரர்கள் தங்கள் குறை களை நேரடி யாகவோ, தபால் மூலமாக வோ அலுவலக மின் அஞ்சல் முகவரி ro.nagercoil@epfindia.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • 24-ந் தேதி சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்து ள்ள புகழ்பெற்ற அம்பாள் திருத்தலமாக விளங்கி வரும் கர்ப்பரட்சா ம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இதில் 20ந்தேதி ஏகதின இலட்சார்ச்ச னையும், 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்ப ரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னையும், 24ந்தேதி விஜயதசமி அன்று மாலை சுவாமி சந்திர சேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும். இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பா ர்வையில் கோயில் செயல் அலுவலர் சு. அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது. நிகழ்ச்சியை சேரன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில் , ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒளிந்துள்ள தனித்திறமைகளை வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் .அதற்கு ஆசிரியர்களும் தூண்டு கோளாக இருக்க வேண்டும் என்றார்.

    இவரைத்தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் கெளசல்யா தேவி வரவேற்று பேசினார். மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மேடையில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் தேன்மொழிசெல்வி சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும். அதனை தகுந்த நேரத்தில் வெளிக்காட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு 20க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்டுரை வாசித்தல், வினாடி வினா,சமையல்போட்டி, குறும்பட போட்டி, புகைப்பட போட்டி, நடனப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆங்கில உதவிப்பேராசிரியர் புவனா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது
    • மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி வனச்சரகம் சார்பில் நீலகிரி வரையாடுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஓவியம், பேச்சு, வினாடி-வினா மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வனப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட வனஅலுவலர் கவுதம், மாணவர்களிடம் வரையாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    • மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மங்கலம்:

    கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் தன் சுத்தம் பேணுதல் மற்றும் மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.

    • தோகைமலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • 20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் பயன்பெரும் 264 குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்

     குளித்தலை,

    குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. கரூர் கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள 112 பின்தங்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது.

    வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து முதல் கட்டமாக தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சுபோசித் பரிவார் -போஷன் மீல்ஸ் என்ற தலைப்பில் மாவட்ட திட்ட அலுவலர் உமா சங்கர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து 6 மாதம் முடிந்து 181 வது நாள் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணை உணவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து திட்ட அலுவலர் கள் விளக்கவுரை வழங்கப்பட்டது.

    20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 264 பயனாளிகளுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,நிகழ்ச்சியில் ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு அறிமுகப்படுத்தப்பட்டு தாய்மார்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் வழங்கினார். தொடர்ந்து தோகைமலை பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
    • இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார்.

    நாகர்கோவில்:

    உலக இதய தினத்தை முன்னிட்டு பெதஸ்தா மருத்துவமனையில் மாரடைப்பை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதய மருத்துவர் டாக்டர் டேனி கோல்ட் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பெத ஸ்தா மருத்துவமனையின் நிறுவனர்களான டாக்டர் ஜெயராஜ், டாக்டர் ஸ்டார் லெட் ஜெயராஜ் மற்றும் டாக்டர் ஷீபா டேனி, மரு த்துவ ஊழியர்கள், இதய நோயாளிகள் பங்கேற்றனர். இதில் பெதஸ்தா மருத்து வமனை சார்பில் நட த்திய உலக இதய தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உலக இதய தினத்தையொட்டி மிகவும் கடினமான ஆஞ்சி யோபிளாஸ்ட்டி உடன் ஓ.சி.டி. என்ற புதிய சிகிச்சை ஒரு நோயாளிக்கு செய்யப்பட்டது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    பூதப்பாண்டி:

    தோவாளை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர் பார்வதி, பேரூர் செயலாளார் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.

    உடுமலை:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன்,மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடங்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பெண்கள்,குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள். ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார் சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப்பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார்.

    அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.

    • புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    • வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

    புதுக்கோட்டை 

    1974-77 ஆம் வருட முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்ட 5-வது மகாசங்கமம், குடும்பவிழா இருநாட்கள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தின் வெவ்வெறு பகுதியிலிருந்தும், நாட்டின் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த 35 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படித்து, வெவ்வேறு அரசு, தனியார் மற்றும் பொதுதுறைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்ற பின் நடைபெறும் இந்த குடும்ப நிகழ்ச்சியில், தாங்கள் பள்ளியில்பயின்ற நாட்களின் நினைவுகள் மற்றும் தங்களுக்குள்ள வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர். திருமயம் கோட்டை, குடுமியான்மலை ஈஸ்வரன்கோவில், சித்தன்னவாசல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் பார்வையிட்டு, வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 1974-7-ம் வருட புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி மாணவர்களான அக்ரிஎன்.சர்புதீன், டாக்டர்எம்.கல்யாணகுமார், வெங்கட கோபாலகிருஷ்ணன், கோவிந்தன் மற்றும் உத்தமன் முதலானோர் செய்திருந்தனர்.

    • அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
    • நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்

    ராஜாக்கமங்கலம் :

    இந்தியா முழுவதும் என் மண் என் தேசம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து மண் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியமாக அது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இளையோர் நல அலுவலர் ஞானசந்திரன் அஞ்சல் துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன், ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குன்னூர் கிராமத்தில் ஆர்பர் தினம் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் ஆண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் மற்றும் ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் ஆகியோர் தொடங்கி வைத்து மரக் கன்றுகளை நட்டனர்.

    தமிழகத்தில் 21 சதவிகிதம் பசுமை பரப்பு உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பசுமை தமிழகம் இயக்கம், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை யாக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் தற்போது சுமார் 6.5 சத விகிதம் பசுமை பரப்பளவு உள்ளது. அதனை அதி கரிக்கும் வகையில் வனத் துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாது காப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 7 லட்சம் மரக்கன்றுகள் நடு வதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இத்திட் டத்தின் மூலம் விவசாயி களுக்கு பருவ மழை காலத்தில் நடவு செய்ய தேக்கு மகாகனி வேம்பு நெல்லி வேங்கை புங்கை பூவரசு மலை வேம்பு உள்ளிட்ட கன்றுகள் நாற்றங் கால்களில் தயார் நிலையில் உள்ளது.

    அதன் ஒரு பகுதியாக குன்னூர் கிராமத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவர் கள், தன்னார்வ அமைப்பு கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட னர்.

    ×