search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என் மண் என் தேசம்"

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சில்லரைபுரவு ஊராட்சி தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    டெல்லியில் அமைய உள்ள நினைவிடத்திற்கு என் மண் என் தேசம் என்கின்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தென்காசி தெற்கு ஒன்றியம் சார்பில் இலஞ்சி குமாரர் கோவிலில் பூஜை செய்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவரும், தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜ.க. பொதுச்செயலாளருமான குமார் தலைமை தாங்கினார். ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் மற்றும் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    தென்காசி தெற்கு ஒன்றிய பொருளாளர் அய்யப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், குற்றாலம் பேரூராட்சி மன்ற முன்னாள் கவுன்சிலர் அசோக்பாண்டியன், குற்றாலம் கிளை தலைவர் செல்வராஜ், குத்துக்கல்வலசை ராம்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
    • நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்

    ராஜாக்கமங்கலம் :

    இந்தியா முழுவதும் என் மண் என் தேசம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து மண் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியமாக அது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இளையோர் நல அலுவலர் ஞானசந்திரன் அஞ்சல் துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன், ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×