சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி

இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கிய போது எடுத்த படம்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com