search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sagir Hussain College"

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிவகங்கை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து என் மண், என் தேசம் என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.

    கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பீர் முஹம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார்.

    நிகழ்வில் சிவகங்கை, நேரு யுவகேந்த்ரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை, குழந்தைகள் நல வாரிய உறுப்பினர், மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் பாத்திமா கனி ஆகியோருடன் இணைந்து நேரு யுவகேந்திரா அமைப்பை சேர்ந்த நாகப்பாண்டி மற்றும் கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சாகிர்உசேன் கல்லூரியில் புதிய நிர்வாகக்குழு தேர்வு நடந்தது.
    • புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தி டாக்டர் சாகிர் உசேன் காலேஜ் சொசைட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது. கல்லூரி சட்ட விதியின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட துணைப்பதிவாளர் மேற்பார்வையில் பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக அஹமது, ஜலாலுதீன் செயலாளராக ஜபருல்லா கான், பொருளாளராக அப்துல் அஹது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நசீர் கான், அஸ்ரப் அலி, உஸ்மான் அலி, ஜாபர் ஹுசைன், அப்துல் சலீம், அபுபக்கர் சித்திக், சிராஜுதீன், அவுரங்கசீப், ஹமீத் தாவூத் ஆகியோர் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    • சாகிர் உசேன் கல்லூரியில் புதிய முதல்வர் பதவியேற்றார்.
    • முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய அப்பாஸ் மந்திரி பணிஓய்வு பெற்றார். இதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லாஹ் கான் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் மற்றும் உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், உஸ்மான் அலி ஆகியோர் முன்னிலையில் ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன் புதிய முதல்வர் பணிநியமன ஆணையை வழங்கினார்.

    கல்லூரி துணைமுதல்வர், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர், டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ×