கருகம்பாளையம் அரசு பள்ளியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

மங்கலம்:

கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் தன் சுத்தம் பேணுதல் மற்றும் மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com