என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
- வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர்
புதுக்கோட்டை
1974-77 ஆம் வருட முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்ட 5-வது மகாசங்கமம், குடும்பவிழா இருநாட்கள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தின் வெவ்வெறு பகுதியிலிருந்தும், நாட்டின் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த 35 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படித்து, வெவ்வேறு அரசு, தனியார் மற்றும் பொதுதுறைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்ற பின் நடைபெறும் இந்த குடும்ப நிகழ்ச்சியில், தாங்கள் பள்ளியில்பயின்ற நாட்களின் நினைவுகள் மற்றும் தங்களுக்குள்ள வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர். திருமயம் கோட்டை, குடுமியான்மலை ஈஸ்வரன்கோவில், சித்தன்னவாசல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் பார்வையிட்டு, வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 1974-7-ம் வருட புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி மாணவர்களான அக்ரிஎன்.சர்புதீன், டாக்டர்எம்.கல்யாணகுமார், வெங்கட கோபாலகிருஷ்ணன், கோவிந்தன் மற்றும் உத்தமன் முதலானோர் செய்திருந்தனர்.






