search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு
    X

    குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்து விழிப்புணர்வு

    • தோகைமலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • 20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் பயன்பெரும் 264 குழந்தைகளின் தாய்மார்கள் கலந்து கொண்டனர்

    குளித்தலை,

    குழந்தைகளுக்கு துணை உணவு அளிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்றது. கரூர் கரூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றியமாக தோகைமலை வட்டாரம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் கண்டறியப்பட்டுள்ள 112 பின்தங்கிய மாவட்டங்களில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் பின்தங்கிய வட்டாரமாக கண்டறியப்பட்டுள்ளது.

    வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கமாக கடந்த மாதம் 30-ந்தேதி அன்று காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து முதல் கட்டமாக தமிழக அரசு வழிகாட்டுதல்களின்படி கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சுபோசித் பரிவார் -போஷன் மீல்ஸ் என்ற தலைப்பில் மாவட்ட திட்ட அலுவலர் உமா சங்கர், தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இணைந்து 6 மாதம் முடிந்து 181 வது நாள் ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு துணை உணவு அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து திட்ட அலுவலர் கள் விளக்கவுரை வழங்கப்பட்டது.

    20 பஞ்சாயத்துகளில் உள்ள 114 அங்கன்வாடி மையங்களில் 264 பயனாளிகளுக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,நிகழ்ச்சியில் ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு அறிமுகப்படுத்தப்பட்டு தாய்மார்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் வழங்கினார். தொடர்ந்து தோகைமலை பகுதிகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×