search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness awareness"

    • தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.
    • மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் மற்றும் எஸ்.ஆர். நகர் பகுதியில் தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி கையெழுத்து இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் துவக்கி வைத்தார்.

    மேலும் "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க மாட்டோம், பொருட்கள் வாங்க செல்லும் பொழுது தடைசெய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை பயன்படுத்த மாட்டேன் நம் நகரின் தூய்மை மற்றும் பசுமையை மேம்படுத்த நான் ஒத்துழைப்பேன். தூய்மை உறுதிமொழி எனது குப்பை எனது பொறுப்பு, என் நகரம் என் பெருமை. எனது நகரத்தை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்புமாகும், தூய்மைப்பணிகளுக்கு என்னைஅர்ப்பணித்து கொள்ள, என் நேரத்தை ஒதுக்குவேன். நான் பொது இடங்களில் குப்பை கொட்டமாட்டேன், பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்கமாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பேன், தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில், என்னை சார்ந்தவர்களும் குறைந்தபட்சம் தினசரி 2 மணி நேரம் பங்கேற்க ஊக்குவிப்பேன்.நகர தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நான் நம்புகிறேன், என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், உதவி ஆணையாளர் (மண்டலம்) வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மங்கலம்:

    கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாட்டில் தன் சுத்தம் பேணுதல் மற்றும் மக்கும் குப்பை ,மக்காத குப்பை குறித்து கிராமிய நடன கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

    கருகம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காஞ்சனமாலை ,சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கிராமிய நடன கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் கோகிலாமணி நன்றி கூறினார்.

    • சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீமாதவ சேவா மையம் மற்றும் மலை ஆர்மி கோச்சிங் சென்டர், பாய்ஸ்,கோர்ஸ் கிளப் இணைந்து தூய்மையான பாரதம் சேவா நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.

    பின்னர் தலைமை டாக்டர் சிவக்குமார், அரசு டாக்டர் நீதிமன்னன் தலைமையில் மலை கோச்சிங் சென்டர் கொடியரசன், ஸ்ரீமாதவ சேவா மைய பொறுப்பாளர் , தூய்மை பாரதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் ஸ்ரீமாதவ சேவா மையத்தின் மாவட்ட, நகர மற்றும் இந்துமுன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் மற்றும் 100-க்கும்மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • 513 அரசு பள்ளிகளில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் சுகாதாரமான குடிநீர், தூய்மையாக வகுப்பறை களை வைத்துக் கொள்வது, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்து க்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது பள்ளி களில் காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற செயல்பாடுகளை மாண வர்களிடம் ஊக்குவிப்ப தற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி, நடுநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 513 அரசு பள்ளிகளில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாத மும் முதல் திங்கள் கிழமையில் நடைபெறும் .

    இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவல ரின் நேர் முக உதவியாளர் பெருமாள், லெட்சுமிபுரம் பள்ளி தலைமையாசிரியர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை - தரம் பிரித்து வழங்குவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.
    • அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆலோசனையின் பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக குப்பையில்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நகர செயலாளர் வெள்ளைச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணிக்கு நகர்மன்ற தலைவர் திருமலைசாமி முன்னிலை வகித்தார். "எனது குப்பை எனது பொறுப்பு" "மக்கும் குப்பை, மக்காத குப்பை" தரம் பிரித்து வழங்குவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

    இதில் ஆணையாளர் (பொ) சக்திவேல், உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியாளர் அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் படி நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் உடன் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், வார்டு கவுன்சிலர் அழகம்மை, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • “பசுமை இந்தியா தூய்மை இந்தியா” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல், மறுசுழற்சி ஆகியவை குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் சார்பில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு "பசுமை இந்தியா தூய்மை இந்தியா" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கொடைக்கானல் பஸ் நிலையத்திலிருந்து தொடங்கி, அண்ணா சாலை வழியாக, மூஞ்சிக்கல்லில் நிறைவுற்றது. பேரணியை தலைமையேற்று நடத்திய துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் மரம் வளர்த்தல், தூய்மையை பேணுதல், பிளாஸ்டிக் ஒழித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    பதிவாளர் ஷீலா மகாத்மா காந்தியடிகளின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றுவது நம் கடமை என்று ஊக்குவித்தார். கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் நாராயணன் கொடைக்கானலின் தூய்மை பணிகள் பற்றி எடுத்துரைத்து, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் பணிகளைப் பாராட்டினார்.

    பின்னர் 3 பேரும் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல், மறுசுழற்சி ஆகியவை குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பேராசிரியர்கள் ராஜம், ஜெபராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேரணியை ஜோஸ் கவிதா மற்றும் தாமரைச் செல்வி ஒருங்கிணைத்து நடத்தினர்.

    • அய்யலூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும், மக்காத குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    வடமதுரை:

    அய்யலூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மக்கும், மக்காத குப்பை, பிளாஸ்டிக் ஒழிப்பு, பொது சுகாதாரம், துணிப்பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கடவூர் பிரிவிலிருந்து கருவார்பட்டி, கந்தமநாயக்கனூர் வரை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கந்தம நாயக்கனூரில் இருந்து ரங்கப்பன் நாயக்கர் குளத்திற்கு நீர் வரத்து செல்லும் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணியினை பேரூராட்சி தலைவர் கருப்பன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் பாண்டீஸ்வரி, துணைத்தலைவர் செந்தில், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

    • என் குப்பை என் பொறுப்பு என வாசகம்
    • மாணவர்கள் வீடுகளை தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுரை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி சார்பில் காட்பாடி ரோடு பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஜெயக்கொடி தலைமை தாங்கினார். நகராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் சதீஷ்குமார், சாமுண்டீஸ்வரி, சிகாமணி, ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும், தான் உபயோகிக்கும் பொருட்களை பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் முழு தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    • என் குப்பை என் பொறுப்பு என வாசகம்
    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சி சார்பில் செதுக்கரை பகுதியில் உள்ள செவன்த் டே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோசப்மோசஸ், முன்னாள் நகர் மன்ற தலைவர் த.புவியரசி, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் ஜெபமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறு வயது முதலேயும், பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே வீடுகள் மற்றும் பொது இடங்கள், பள்ளிகளில் குப்பைகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது குறித்தும் தான் உபயோகிக்கும் பொருட்கள் பொது இடங்களில் வீசுவதை தவிர்த்து அதற்கான குப்பை தொட்டியில் போடுவது குறித்தும் அப்பழக்கம் தொடர்ந்து வரவேண்டும் எனவும் குடியாத்தம் நகரை தூய்மையான நகராக மாற்ற மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    அதேபோல் மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் தூய்மையாக வைத்துக் கொண்டு என் குப்பை என் பொறுப்பு என நடக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்கள் தூய்மையான நகரம் அதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

    இந்நிகழ்ச்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் பென்னி, சிவக்குமார் தூய்மை பாரத மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    ×