என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கையெழுத்து இயக்கம்"

    • மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டம்
    • குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் நீதிபதி வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்திற்கு பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைகளின் படி புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    ஆனால் தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து குமரி மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடந்தது.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், நிர்வாகிகள் கண்ணன், சுப்பிரமணியன், பிரவீன், சுரேஷ் பாபு, தியாகராஜன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டிருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவினாசி,நவ.16-

    அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    4 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம், செக் போஸ்ட், உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் பஸ் நிலையம், செக் போஸ்ட், உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் பல்லடம் பகுதியில் 4 டாஸ்மாக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது என்றும், பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடை, நால்ரோடு பகுதியில் செயல்படும் பார் உள்ளிட்டவைகளை,வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பல்லடம் பஸ் நிலையம்,கடைவீதி, உள்ளிட்ட இடங்களில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

    • வக்பு வாரிய சொத்துக்களை மீட்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
    • முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் சங்கத்தின் பெயரில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றி கொடுத்த அப்போதைய வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்பு சொத்தை முறைகேடாக விற்பனை செய்த சங்க நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், முறைகேடான பத்திரப்பதிவு ஆவண எண் 324/2370 ஐ ரத்து செய்து அந்த இடத்தை மீண்டும் வக்பு வாரியத்தின் பெயரில் பட்டா வழங்க வேண்டியும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

    கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் தலைவர் சீனி முகம்மது, சாலைத்தெரு பேங்க் அப்துல் காதர், முகமது இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் காட்டு வாப்பா முன்னிலையில் நடத்தப்பட்டது.

    முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவர் கீழை முகமது சிராஜுதீன் செய்தார்.

    • உம்மன்சாண்டி மகன் தொடங்கி வைத்தார்
    • பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ரப்பர் தொழிற் சாலை, விவசாயக் கல்லூரி, மீன் வளக் கல்லூரி, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் 1 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் மார்ஷல் நேசமணி சிலை முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவரும், அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் மாநில தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் அலெக்ஸ், மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அப்ஜித், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி மகனும், இளைஞர் காங்கிரஸ் வெளிக்கொணர்வு தேசிய தலைவருமான சாண்டி உம்மன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

    • தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
    • ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக அனுசரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்க ளிடையே ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலைக்குழு பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் திருநந்தன், அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • புதிய உறுப்பினர் சேர்க்கை என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    அவிநாசி :

    அவிநாசியில் தமிழ்நாடு அனைத்து எல்.பி.ஜி., சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில், திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

    இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தி தொழிற்சங்கத்தை வலுப்படுத்துவது, மார்ச் 20ந்தேதியிலிருந்து 30ந் தேதிக்குள் கோவை மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெறும் நிகழ்ச்சியை தொடங்குவது,மார்ச் 30 -ந்ேததி முதல் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம், ஏப்ரல் 15 முதல் 30-ந் தேதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.
    • தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உற்பத்தியாகி நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கும் புனித நதியான திருமணி முத்தாற்றை பாதுகாக்க வேண்டி அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், சேலம் தெய்வீக தமிழ்சங்கம் அறக்கட்டளை சார்பாக 1 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாசேலம் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் அருகே உள்ள ஹோட்டல் சாய் விஹாரில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முருகேச பூபதி, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு மோகன், ராசி கே.சரவணன், தியாகராஜன், என்.ஸ்ரீதர், ஆறுமுக உடையார், முருகன், ஜெய்சந்த் லோடா, ஓ டெக்ஸ் இளங்கோவன், டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம், கவிஞர் பொன்னுரங்கன், பா.மா.ஆறுமுகம், ஸ்ரீஇராமன், லக்ஷ்மன் குமார் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செம்முனி, டாக்டர் சந்திரசேகர், தெய்வீக தமிழ்சங்க தலைவர் ராமன், பொருளாளர் ஸ்ரீதர், டாக்டர் கே.குமாரசாமி ஆகியோர் செய்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.

    இதைக்கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம், கல்லூரிக்குள் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர், மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரி களிடம் சொல்கிறோம் என்று கூறினார்.

    அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. இந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் அமைக்க இருக்கும் தொழில்நுட்ப பூங்காவினை மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரியும் சங்க நிர்வாகி யாழினிபிரியா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியினை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    • ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை.
    • மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஈஸ்வரி அங்குள்ள ராம்நகர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:- 14வது வார்டு ராம் நகர் பகுதியில், முறையாக கழிவுநீர் கால்வாய் கழிவுகள் அகற்றப்படுவதில்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.இதனை மனுவாக தயாரித்து மீண்டும் நகராட்சி நிர்வாகத்திடம் அளிக்கப்படும்.

    இதற்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதில் பாஜக., நகர தலைவர் வடிவேல், 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சசிரேகா மற்றும் பாஜக., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
    • பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி, கோல்டன் நகா் சாலை போதிய பராமரிப்பில்லாமல் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதனை கோல்டன் நகா் கிளை செயலாளா் பிரனேஷ் தொடங்கி வைத்தாா். இதில், வாலிபா் சங்க வடக்கு மாநகரச் செயலாளா் விவேக், வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா்கள் பிரவீன்குமாா், சீனிவாசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர கமிட்டி உறுப்பினா் மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன.
    • இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

    சென்னை:

    உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

    இதன் தொடக்க விழா தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று நடந்தது. பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிய துண்டு பிரசுரங்களையும் பொது மக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:- உலகின் 20 வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகள் விளைவித்துள்ளன. இந்திய போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் மக்கள் பாதிக்க கூடிய சூழல் உள்ளது.

    தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் சுற்று சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது. அந்த குழுக்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை. இதை தீவிரப்படுத்த வேண்டும்.

    இதை தனிமனிதரால், சாத்தியப்படுத்த முடியாது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட அமைப் பாளர் மு.ஜெயராமன், பசுமைத்தாயம் மாநில செயலாளர் அருள், இணை செயலாளர்கள் எஸ்.கே.சங்கர், சத்ரிய சேகர், ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, முத்துக்குமார், அடையார் வடிவேல், சவுமியா அன்பு மணியின் மகள் சுஞ்சத்ரா சவுமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×