என் மலர்
உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்
- வக்பு வாரிய சொத்துக்களை மீட்க கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
- முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
கீழக்கரை
கீழக்கரையில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை தனியார் சங்கத்தின் பெயரில் வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யக் கோரியும், போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றி கொடுத்த அப்போதைய வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வக்பு சொத்தை முறைகேடாக விற்பனை செய்த சங்க நிர்வாகிகள் மீது குற்றவியல் வழக்கு தொடரவும், முறைகேடான பத்திரப்பதிவு ஆவண எண் 324/2370 ஐ ரத்து செய்து அந்த இடத்தை மீண்டும் வக்பு வாரியத்தின் பெயரில் பட்டா வழங்க வேண்டியும் கையெழுத்து இயக்கம் நடந்தது.
கீழக்கரை வெல்பர் அசோசியேஷன் தலைவர் சீனி முகம்மது, சாலைத்தெரு பேங்க் அப்துல் காதர், முகமது இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் காட்டு வாப்பா முன்னிலையில் நடத்தப்பட்டது.
முதல்-அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவர் கீழை முகமது சிராஜுதீன் செய்தார்.






