என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்
    X

    தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப் போவ தாக, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்துள்ளனர்.

    இதைக்கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கடந்த வாரம், கல்லூரிக்குள் அமைந்துள்ள, திருவள்ளுவர் சிலை முன்பு மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திய கல்லூரி முதல்வர், மாணவ-மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து, உயர்கல்வித்துறை அதிகாரி களிடம் சொல்கிறோம் என்று கூறினார்.

    அப்போது போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது. இந்த நிலையில் நேற்று திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் அமைக்க இருக்கும் தொழில்நுட்ப பூங்காவினை மாற்று இடத்தில் அமைக்க கோரியும், கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க கோரியும் சங்க நிர்வாகி யாழினிபிரியா தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மாவட்டத் தலைவர் தங்கராஜ் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர். பின்னர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில் நுட்ப பூங்கா அமைக்கும் முயற்சியினை கைவிட்டு மாற்று இடத்தில் அமைக்கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×